இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில், கடந்த 2013ம் ஆண்டு மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியான படம் சூது கவ்வும். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், கருணாகரன், ராம் திலக், எம்எஸ் பாஸ்கர், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. குறிப்பாக இந்த படம் நடிகர் விஜய் சேதுபதியின் திரைபயணத்தில் முக்கிய படமாக அமைந்தது. இந்த படத்தின் தொடர்ச்சியாக 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூது கவ்வும் 2ம் பாகம் நாடும் நாட்டு மக்களும் என்ற தலைப்பில் மீண்டும் வெளியாகிறது. ஆனால் இந்த படத்தில் மிர்சி சிவா நாயகனாக நடித்திருக்கிறார்.
அதே போல் இந்த படத்தை நலன் குமாரசாமி இயக்கவில்லை. அவருக்கு பதிலாக எஸ்ஜே அர்ஜூன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் மிர்சி சிவாவுடன் வாகை சந்திரசேகர், கருணாகரன், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காமெடி கலந்த ஆக்சன் படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் குறித்த அறிமுக விழாவில் பேசிய தயாரிப்பாளர் சிவி குமார், சூது கவ்வும் முதல் பாகத்தில் விஜய் சேதுபதி எப்படி பொருந்தி நடித்திருந்தாரோ, அதே போல் இந்த 2ம் பாகத்தில் மிர்சி சிவா அந்த கேரக்டரில் சிறப்பாக பொருந்தி நடித்திருக்கிறார். இந்த படத்தை உருவாக்க டைரக்டர் அர்ஜூன் 3 ஆண்டுகள் எடுத்துக்கொண்டார் என்றார்.
அதற்கு பின் நடிகர் மிர்சி சிவா விழாவில் பேசுகையில், சூது கவ்வும் 2 படத்தின் கதையை 3 வருஷமா எழுதினாங்களாம். அதெல்லாம் ஒண்ணுமே கிடையாது, இவங்க என்ன அவதார், டைட்டானிக் படமா எடுத்திருக்காங்க. சும்மா சொல்றாங்க. 3 வருஷத்துல ரெண்டரை வருஷம் கோவித். கொரோனா தொற்றுகாலம். யாருமே ஒருத்தரை ஒருத்தர் நேர்ல பார்த்துக்கல. மீட் பண்ணல. சும்மா நீங்க எல்லாம் இருக்கறதால அப்படி சொல்றாங்க.
3 வருஷமா படம் எடுத்தா நீங்க அவதார் மாதிரி படம் எடுக்கணும், இல்லே டைட்டானிக் மாதிரி படம் எடுக்கணும். அதெல்லாம் ஒண்ணுமே கிடையாது. இரண்டரை வருஷமா யாருமே பக்கத்துல கூட மீட் பண்ணிக்கலே. கோவித் காலமாக இருந்ததால் என்று பேசினார். இப்படி படத்தின் நாயகனே இப்படி படம் குறித்து நெகட்டிவான விமர்சனத்தை மேடையில் பேசியது படக்குழுவை அதிர்ச்சியடைய செய்தது.





