- Advertisement -
Homeபொழுதுபோக்குஇங்குள்ளவர்கள் மலையாள படத்தை பாராட்டி கொண்டிருக்க, சமீபத்தில் ரிலீசான தமிழ் படத்தை புகழ்ந்து தள்ளிய மோகன்லால்......

இங்குள்ளவர்கள் மலையாள படத்தை பாராட்டி கொண்டிருக்க, சமீபத்தில் ரிலீசான தமிழ் படத்தை புகழ்ந்து தள்ளிய மோகன்லால்… இப்போ புரியுதா மக்கா தமிழ் சினிமாவின் அருமை…

- Advertisement -

தமிழ் சினிமாவில் எந்த திரைப்படங்கள் வெளியானாலும் சரி, இது மலையாள திரைப்படத்தைப் போல இல்லை எனக் கூறி இணையத்தில் பதிவிடும் கூட்டம் இங்கு உண்டு. குறிப்பாக எந்த ஒரு திரைப்படத்தையும் மலையாள திரைப்படத்தோடு ஒப்பிட்டு இணையத்தில் ஒரு விவாதமே நடத்துவார்கள். அதேபோல் மலையாளத்தில் ஒரு திரைப்படம் வெற்றி பெற்று விட்டாலும் ஏன் தமிழ் சினிமாக்களில் இதைப் போன்று திரைப்படங்கள் வெளியாவது இல்லை என்றும் கூறுவார்கள்.

 

- Advertisement -

அப்படியாக தமிழ் சினிமாவிலும், ஏராளமான மலையாள திரைப்படங்கள் டப்பிங் செய்யாமலேயே வெளியிடப்பட்டு வெற்றி பெற்றதுண்டு. இதில் உதாரணத்திற்கு பிரேமம் திரைப்படத்தைக் கூறலாம். முழுக்க முழுக்க இது மலையாளத் திரைப்படம் என்றாலும், அதில், மலர் டீச்சர் என்ற தமிழ் கதாபாத்திரமும், அழகான காதல் காட்சிகளும் இடம் பெற்று இருந்ததால் தமிழ்நாட்டில் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

 

- Advertisement -

ஆனால் இதுவும் தமிழில் வெளியான ஆட்டோகிராப் திரைப்படத்தின் ஒரு உல்ட்டா என்று தான் கூறுவார்கள். இருப்பினும், அதன் காட்சிகள் ரசிக்க தக்கும் வகையில் இருந்ததால் வெற்றி பெற்றது பிரேமம் திரைப்படம். இதேபோல், சார்லி உள்ளிட்ட திரைப்படங்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

 

அது மட்டுமல்ல நடப்பாண்டிலேயே சில மலையாளத் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றன. உதாரணத்திற்கு மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தை கூறலாம். கொடைக்கானலுக்கு இளைஞர்கள் சுற்றுலா செல்வதும் அங்கு குணா குகையில் விழுந்த ஒரு இளைஞரை மீட்பதும் தான் இதன் பிரதான கதை. குணா படத்தின் பாடலும் இதில் இடம்பெற, தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது.

 

இதே போல் ஆவேசம், பிரேமலு உள்ளிட்ட திரைப்படங்களும் நடப்பாண்டில் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றன. இப்படியான சூழலில், மலையாள திரை உலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் மோகன்லால், தமிழ் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளிக்க, அவரிடம் இது குறித்து கேட்கப்பட்டது.

 

தமிழ் ரசிகர்கள் மலையாள திரைப்படத்தை கொண்டாடி தீர்க்கிறார்கள். இதுபோல் படம் இங்கு இல்லையே என்று கூறுகிறார்கள். அதேபோல் உங்களுக்கும் தமிழ் திரைப்படம் மீது அப்படி ஒரு ஆர்வம் எழுந்திருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மோகன்லால், அண்மையில் லப்பர் பந்து திரைப்படத்தை பார்த்தேன். என்ன ஒரு அருமையான படம் அது. சிம்பிளான ஒரு விஷயத்தை வைத்து எவ்வளவு பிரில்லியண்டாக கதை எழுதி இருக்கிறார்கள் என்று பாராட்டினார்.

- Advertisement -

சற்று முன்