இப்போது எல்லாம் பிறமொழிகளில் இருந்து வரும் சில படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று விடுகின்றன. அதுவும் மொழி கடந்த படங்களாக அவை இருக்கின்றன. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் தெலுங்கில் இருந்து வெளியான பாகுபலி, ஆர்ஆர்ஆர், புஷ்பா போன்ற சில படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களாக இருந்தன.
இதிலும் குறிப்பாக கடந்த 2021ம் ஆண்டில் புஷ்பா படம் முதல் பாகமாக வெளிவந்த நிலையில், தற்போது 2ம் பாகமாக அந்த படம் வெளிவர உள்ளது. படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. வருகிற டிசம்பர் 6ம் தேதி புஷ்பா 2 படம் ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்பட்டாலும், இன்னும் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் பாக்கி இருப்பதால் ரிலீஸ் தேதி தாமதமாகும் என்ற பேச்சு பரவலாக அடிபட்டது.
ஆனால் கண்டிப்பாக டிசம்பர் 6ம் தேதி படம் வெளியாகும் என்று படத்தின் இயக்குனர் சுகுமாரனும், படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுனும் ஏற்கனவே பல நேர்காணலில் அதை தெளிவுபடுத்தி உள்ளனர். சமீபத்தில் படக்குழு சார்பில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றிலும் 75 நாட்களில் படம் புஷ்பா 2 படம் ரிலீஸ் ஆகும் என்று கூறியிருந்ததும்குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை இப்போது எந்த படங்கள் எப்போது ரிலீஸ் என்பதில் அதீத கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஏனெனில் பான் இந்தியா படங்களாக பல படங்கள் வெளிவருகின்றன. அப்படி வெளிவரும் படங்கள் மற்ற படங்களின் வசூலை பாதிக்கக்கூடிய கூடாது என்பதால் படப்பிடிப்பு முடிந்தாலும், ரிலீஸூக்கு தயாராக உள்ள படங்கள், மற்ற படங்கள் வராத நாளில் ரிலீஸ் செய்யப்படுகின்றன. தங்களது படத்துக்கு போட்டியாக மிகப்பெரிய படங்கள் போட்டியாக வராத பட்சத்தில் மட்டுமே தங்களது படங்களை ரிலீஸ் செய்வது என்ற ஒரு சூழ்நிலைக்கு சினிமாத் துறையினர் தள்ளப்பட்டுள்ளனர்.
வருகிற டிசம்பர் 6ம் தேதி புஷ்பா 2 ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்பட்ட நிலையில், இப்போது அதில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புஷ்பா 2 படம் டிசம்பர் 6ம் தேதிக்கு பதிலாக ஒரு நாள் முன்னதாக டிசம்பர் 5ம் தேதியே வெளியாகிறது என்ற தகவல் தற்போது உறுதியாகி உள்ளது.
இப்போது சினிமாவில் வியாழக்கிழமை சென்டிமென்ட் அதிகரித்து வருகிறது. அதாவது வியாழக்கிழமை ரிலீஸ் ஆகும் படங்கள் பெரிய வெற்றியை பெறுகின்றன என்று கூறப்படுவதால், புஷ்பா 2 படத்தையும் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக வியாழக்கிழமை ரிலீஸ் செய்ய படக்குழு முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது. இது புஷ்பா 2 படத்தை எதிர்பார்த்திருக்கும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை தந்துள்ளது.





