- Advertisement -
Homeபொழுதுபோக்குஏகே 64 படத்தில் நடிகர் அஜீத்குமாருடன் இணையும் நட்சத்திர நடிகர்கள்… அட இவரும் நடிக்கிறாரா என...

ஏகே 64 படத்தில் நடிகர் அஜீத்குமாருடன் இணையும் நட்சத்திர நடிகர்கள்… அட இவரும் நடிக்கிறாரா என ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் கடந்தாண்டு வெளியாகி வெற்றி பெற்றது. அதன்பிறகு நடிகர் அஜீத்குமார் பல்வேறு நாடுகளில் நடந்த கார் ரேஸில் பங்கேற்க சென்று விட்டார். கடந்த 2025ம் ஆண்டு முழுவதும் அவர் வெளிநாடுகளில் தான் இருந்தார். கார் ரேஸில் தொடர்ந்து பங்கேற்றார். இதனால் அவர் நடிக்கவில்லை.

இதனால் கடந்த ஓராண்டாக அஜீத்குமார் நடித்த புதிய படம் எதுவும் திரைக்கு வரவில்லை. அதே நேரத்தில் அவர் நடித்த மங்காத்தா படம் ரி ரிலீஸ் ஆனதால் அஜீத் ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடினர். பெரிய அளவில் வசூலும் குவிந்தது. இப்போது அஜீத்குமார் நடித்த துணிவு படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது.

- Advertisement -

குட் பேட் அக்லி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தனது படத்தை இயக்க ஆதிக் ரவிச்சந்திரனுக்கே அஜீத்குமார் வாய்ப்பளித்தார். அதனால் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் தனது 64வது படத்தில் நடிக்க உள்ளார். மிக விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட உள்ளது.

மேலும் ஏகே 64 படத்தில் அஜீத்குமாருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா நாயகியாக நடிப்பதாக ஏற்கனவே கமிட் ஆன தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் சிலர் முன்னணி பிரபல நடிகர்கள் நடிப்பது உறுதியாகி உள்ளது. அவர்களிடம் இதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு அவர்கள் தரப்பில் ஓகே சொல்லிவிட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

அதன்படி மலையாள சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் ஏகே 64 படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். மேலும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இயக்குனர் மிஷ்கின் இந்த படத்தில் அஜீத்குமாருடன் இணைந்து நடிக்கிறார். இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமாரும் ஏகே 64 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

ஏற்கனவே நடிகர் மோகன்லால், பிரபுவுடன் சிறைச்சாலை கமல்ஹாசனுடன் உன்னைப் போல் ஒருவன் ரஜினிகாந்துடன் ஜெயிலர் விஜயுடன் ஜில்லா மற்றும் சூர்யாவுடன் காப்பான் போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இப்போது ஜெயிலர் 2 படத்திலும் ரஜினியுடன் மீண்டும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்