- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி குபேரா படங்களில் என் கேரக்டர் அந்த மாதிரி தான் இருக்கும்… லேட்டஸ்ட் அப்டேட் தந்த...

கூலி குபேரா படங்களில் என் கேரக்டர் அந்த மாதிரி தான் இருக்கும்… லேட்டஸ்ட் அப்டேட் தந்த தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா!

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர்தான் நாகர்ஜூனா. மெல்லத் திறந்தது கதவு மாப்பிள்ளை படங்களில் நடித்த நடிகை அமலாவின் கணவர். நடிகை சமந்தாவின் முன்னாள் மாமனார். நடிகை சோபிதா துலிபாலாவின் இந்நாள் மாமனார். நடிகர் நாக சைதன்யாவின் தந்தை என பல அடையாளங்கள் இவருக்கு உள்ளது.

தமிழில் உதயம் இதயத்தை திருடாதே ராட்சசன் பயணம் தோழா போன்ற படங்களில் நாகர்ஜூனா நடித்திருக்கிறார். அதனால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமான ஒரு நடிகர்தான். இப்போது ரஜினிகாந்த் நடித்த கூலி படத்திலும், தனுஷ் நடித்த குபேரா படத்திலும் நாகர்ஜூனா நடித்திருக்கிறார்.

- Advertisement -

வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி கூலி படமும், வருகிற 20ம் தேதி குபேரா படமும் வெளியாக உள்ளது. இந்த 2 படங்கள் குறித்த எதிர்பார்ப்புமே ரசிகர்கள் மத்தியில் மிக அதிகமாக உள்ளது. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பான் இந்தியா படங்களாக இந்த கூலி குபேரா படங்கள் வெளியாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் நாகார்ஜூனா கூலி மற்றும் குபேரா படங்களில் நடித்தது குறித்து கூறியதாவது, கூலி மற்றும் குபேரா என இந்த இரண்டு படங்களிலும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நான் நடித்திருக்கிறேன்.

- Advertisement -

என்னைப் பொறுத்தவரை எனக்கு முக்கியத்துவம் இல்லாத எந்த ஒரு படத்திலும் நான் நடிக்க மாட்டேன். அதோடு ரஜினியின் கூலி படத்தை எடுத்துக் கொண்டால் தியேட்டரில் விசில் பறக்க போகிறது. அப்படி ஒரு கதையில் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.

குபேரா படத்தை எடுத்துக் கொண்டால் தனுஷூக்கு இது ஒரு மிக முக்கியமான படமாக இருக்கும். இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ள இந்த படத்தில் வழக்கத்தில் இருந்து மாறுபட்ட ஒரு கேரக்டரில் நான் நடித்திருக்கிறேன். அந்த வேடத்தில் என்னுடைய ஹீரோயிசம் என்பது துளியும் இருக்காது என்று நடிகர் நாகார்ஜூனா லேட்டஸ்ட் அப்டேட் தந்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்