- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னோட பேரை பலரும் கிண்டல் பண்ணினாங்க, ஆனா இப்போ… அது நடந்துடுச்சு - வெளிப்படையாக பேசிய...

என்னோட பேரை பலரும் கிண்டல் பண்ணினாங்க, ஆனா இப்போ… அது நடந்துடுச்சு – வெளிப்படையாக பேசிய நடிகர் நெப்போலியன்!

- Advertisement -

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் புதுநெல்லு புதுநாத்து படம் மூலம் வில்லன் கேரக்டரில் நடிகராக அறிமுகமானவர் நெப்போலியன். முதல் படத்திலேயே ரசிகர்களிடன் கவனத்தை ஈர்த்த நெப்போலியன் அடுத்த சில ஆண்டுகளில் எஜமான் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார்.

எஜமான் படத்தில் வாணவராயன் ரஜினிக்கு எதிரியாக வல்லவராயன் கேரக்டரில் நெப்போலியன் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதன்பிறகு சில படங்களில் வில்லனாகவும், கிழக்கு சீமையிலே எட்டுப்பட்டி ராசா சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட சில படங்களில் நாயகனாகவும் நடித்த நெப்போலியன் ரசிகர்களின் மனதில் ஒரு நல்ல நடிகராக இடம்பிடித்தார்.

- Advertisement -

திமுக அமைச்சராக உள்ள கேஎன் நேருவின் நெருங்கிய உறவினர்தான் நெப்போலியன். திமுகவில் எம்பியாகவும் இருந்தவர். கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். சமீபத்தில்தான் அவரது மகனுக்கு திருமணம் சிறப்பாக நடந்தது. நெப்போலியனின் உண்மையான பெயர் குமரேசன்தான், அதை நெப்போலியன் என இயக்குனர் பாரதிராஜா தான் மாற்றினார்.

இதுகுறித்து நடிகர் நெப்போலியன் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, என்ன உங்க டைரக்டர் பேர் மாத்தறேன்னு சொன்னாரே மாத்திட்டாரா என்று அப்போது சிலர் என்னிடம் கேட்டனர். ஆமா மாத்திட்டார் என்றேன். என்ன பேரு என்று கேட்டனர். நெப்போலியன்னு வைச்சிருக்கார் என்று சொன்னேன். ஏன் ராயல் சேலஞ்ச் மெக்டவல் விஸ்கின்னு பேர் வைச்சிருக்க வேண்டியதுதானே என்று என்னை கிண்டல் செய்தனர்.

- Advertisement -

அதுக்கு நான் சொன்னேன், அப்படி இல்லடா ரமேஷூ சுரேஷூ பாபுன்னு பேர் வெச்சா தமிழ் சினிமாவுல தான் நடிக்க முடியும். சசிகபூர் ரிஷிகபூர் அனில் கபூர்ன்னு பேர் வெச்சா இந்தி சினிமாவுல தான் நடிக்க முடியும். நான் ஹாலிவுட்டுல நடிக்கணும்ன்னு தான்டா எனக்கு நெப்லோலியன்னு எங்க டைரக்டர் பேர் வைச்சிருக்காரு.

உலகம் பூராவும் எங்கு போனாலும் என்னோட பேரை மாத்த வேண்டியது இல்லைடா என்று சொல்லி அவர்களை சமாளித்தேன். அப்படி சொன்ன வாய் முகூர்த்தமோ என்னமோ இன்னிக்கு ஹாலிவுட்டுல 4 படங்களில் நடித்து விட்டேன். இதுதான் சினிமாவில் பெரிய பயணமாக எனக்கு அமைந்தது என்று நடிகர் நெப்போலியன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்