- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த நடிகை மிகவும் திமிர் பிடித்தவர்… மேடையில் பகிரங்கமாக விமர்சித்த நடிகர் பார்த்திபன் - அதற்கு...

அந்த நடிகை மிகவும் திமிர் பிடித்தவர்… மேடையில் பகிரங்கமாக விமர்சித்த நடிகர் பார்த்திபன் – அதற்கு நச்சென பதில் தந்த நடிகை சுஹாசினி!

- Advertisement -

நடிகை சுஹாசினி கடந்த 1980 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு தர்மத்தின் தலைவன் என்புருஷன்தான் எனக்கு மட்டும்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். இப்போதும் சில படங்களில் முக்கிய கேரக்டர்களில் சுஹாசினி நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இயக்குனர் மணிரத்னத்தின் மனைவிதான் சுஹாசினி. இவர் நடிகர் சாருஹாசனின் மகள். நடிகர் கமல்ஹாசன்தான் சாருஹாசனின் உடன்பிறந்த தம்பி. சுஹாசினிக்கு கமல் சித்தப்பா என்பதும் அவரது மகள் ஸ்ருதிஹாசன் சுஹாசினியின் சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார். இவரது நடிப்பில் உருவான படம் தி வெர்டிக்ட். புதுமுக இயக்குனர் கிருஷ்ணா சங்கர் இயக்கத்தில் இந்த படம் திரில்லர் இன்வெஸ்டிகேசன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஸ்ருதி ஹரிஹரன் பிரகாஷ் மோகன்தாஸ் வித்யுலேகா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் நடிகை சுஹாசினி பேசினார். தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் பேசியதாவது, எனக்கு 50 வயது என்று வெளிப்படையாக சொல்லும் அழகி என்றால் அது சுஹாசினிதான்.

28 வயதுக்கு பிறகு பெண்கள் வயதை சொல்ல மாட்டார்கள். ஆனால் தனது அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி. எனக்கு மணிரத்னம் மீது காதல். மணிரத்னத்திற்கு சுகாசினி மீது காதல். ஒரு பெண்ணின் அழகு 30 வயதுக்கு மேல் அறிவாக மாறும் போது அழகு. அதை 30 வயதுக்கு மேல் அறிவாக மாற்றலாம். அந்த அறிவையே அமைதியாக மாற்றலாம்.

அறிவாக மாறியதற்கு சுஹாசினி உதாரணம். அமைதியாக மாறியதற்கு அன்னை தெரசா உதாரணம். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்று அந்த விழாவில் நடிகர் பார்த்திபன் பேசினார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த நடிகை சுஹாசினி எழுந்து எனக்கு 63 வயதாகிவிட்டது. தெளிவாக சொல்லுங்கள் என்றார். அதற்கு நடிகர் பார்த்திபன், பார்த்தீர்களா இதுதான் திமிரு என்று கூற மேடையில் கலகலப்பை ஏற்படுத்தியது.

சற்று முன்