- Advertisement -
திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் கூறியதாவது, சினிமாவில் வாய்ப்பு தேடிய காலத்தில் தேனாம்பேட்டையில் உள்ள எல்டாம்ஸ் ஹோட்டல் வாசலில் பரிதாபமாக கவுண்டமணி நின்று கொண்டிருப்பார். ஆனால் அவர் சினிமாவில் பிரபலமான பிறகு படப்பிடிப்புகளுக்கு சென்றால் ஸ்டார் ஹோட்டல்களில் தான் தங்குவார். படப்பிடிப்பு முடிந்ததும் பாத் டவல் கட்டிக்கொண்டு ஸ்டைலாக வலம் வருவார். உணவு விஷயத்திலும் சிறந்தவை மட்டுமே தேர்வு செய்வார். பெரும்பாலும் ஹாலிவுட் படங்களை தான் பார்ப்பார். தனக்கு பிடித்த விஷயங்களை ரசித்து அனுபவித்தவர் கவுண்டமணி. தனது வாழ்க்கையை மிகவும் அழகாக வாழ்ந்தவர் என நடிகர் பார்த்திபன் கூறியிருக்கிறார்.





