- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படத்தை டைரக்ட் செய்யும் இயக்குனர் எச் வினோத் யாருன்னு தெரியுமா? - உண்மையை போட்டுடைத்த...

ஜனநாயகன் படத்தை டைரக்ட் செய்யும் இயக்குனர் எச் வினோத் யாருன்னு தெரியுமா? – உண்மையை போட்டுடைத்த நடிகர் பார்த்திபன்!

- Advertisement -

இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து பிறகு புதிய பாதை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நடிகர் பார்த்திபன். பல படங்களை இயக்கிய அவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் பல வெற்றிப் படங்களை தந்திருக்கிறார். சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களிலும் பார்த்திபன் நடித்து வருகிறார்.

புதிய பாதை படத்தை டைரக்ட் செய்த பார்த்திபன் அந்த படத்தில் ஹீரோவாக நடித்த போது தனக்கு ஜோடியாக நடித்த நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அப்போது நடிகை சீதா முன்னணி நாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். ஆனால் திருமணத்துக்கு பிறகு அவர் நடிக்க பார்த்திபன் அனுமதிக்கவில்லை.

- Advertisement -

இந்த சூழலில் 10 ஆண்டுகள் வரை நீடித்த அவர்களது திருமண வாழ்க்கை பிறகு விவாகரத்தில் முடிந்து விட்டது. பார்த்திபனை பிரிந்த பிறகு 2வது திருமணம் செய்த நடிகை சீதாவுக்கு அதுவும் நிலைக்கவில்லை. டிவி சீரியல்களில் பிஸியாக நடித்துவரும் சீதாவும் சிங்கிளாக இருக்கிறார். பார்த்திபனும் சிங்கிளாகவே இருந்து வருகிறார். இருவரும் தங்களது மனவேறுபாடுகளை கடந்து மீண்டும் இணைய வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இயக்குனர் எச் வினோத் இப்போது விஜய் நடிப்பில் ஜனநாயகன் என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் 1 நேர்கொண்ட பார்வை வலிமை துணிவு ஆகிய படங்களை இயக்கிய அவர், இப்போது விஜய் நடிக்கும் படத்தை டைரக்ட் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இயக்குனர் எச் வினோத் குறித்து நடிகர் பார்த்திபன் பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

நடிகர் பார்த்திபன் கூறியதாவது, ஒரு படத்தின் டிரெய்லர் எப்படி இருக்குதுன்னு பார்ப்போம். அதை பார்த்துட்டுதான் படமே பார்ப்போம். இப்போ ஜனநாயகன் படம் ஒரு டிரெய்லர் மாதிரி. இதில் எனக்கு என்ன சந்தோஷம் என்னவென்றால் என்னுடைய உதவியாளர்தான் வினோத். என்னிடம் வேலை பார்த்தவர். அவர்தான் இந்த படத்தின் இயக்குனர். இது எனக்கு பெரிய மகிழ்ச்சியை தருகிறது.

ஏனென்றால் என்னுடைய உதவியாளர்தான் நடிகர் விஜயின் கடைசி படத்தின் இயக்குனர் என்பது. இதில் ஜனநாயகன் என்ற டைட்டிலும் நன்றாக இருக்கிறது. அந்த சவுக்கு வெச்சுக்கிட்டு விஜய் இருக்கிற போஸ்டரும் ரொம்ப நல்லா இருக்கு. இது எல்லாமே அரசியலுக்கான ஒரு ஆரம்பம் டிரெய்லர் மாதிரி நான் என்று நினைக்கிறேன் என்று நடிகர் பார்த்திபன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்