- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவாஜி இறுதி ஊர்வலத்தில் நடந்த சம்பவம்... வாக்குறுதி அளித்த விஜயகாந்த்... நினைவுகளை பகிர்ந்த பிரபு...

சிவாஜி இறுதி ஊர்வலத்தில் நடந்த சம்பவம்… வாக்குறுதி அளித்த விஜயகாந்த்… நினைவுகளை பகிர்ந்த பிரபு…

- Advertisement -

நடிகரும் தேமுதிக தலைவர் ஆன விஜயகாந்த் காலமானார். அவருக்கு வயது 71. 2016 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் விஜயகாந்த். அதன் பிறகு அமெரிக்காவில் சிகிச்சை எடுத்த அவர் தொடர்ந்து ஓய்விலேயே இருந்து வந்தார். தங்கள் தலைவர் மீண்டும் வர மாட்டாரா என்று தேமுதிக தொண்டர்கள் காத்துக் கிடந்தனர்.

ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் அவர் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து கொண்டே இருந்தது. இதனைத் தொடர்ந்து மியாட் மருத்துவமனையில், கடந்த மாதம் அவர் சேர்க்கப்பட்டார். 15 நாட்கள் சிகிச்சையில் இருந்த விஜயகாந்த், வீடு திரும்பிய நிலையில் தேதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

- Advertisement -

அதில் தேமுதிக பொருளாளராக இருந்த பிரேமலதா, பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சிக்கு விஜயகாந்தை அழைத்து வந்தனர். ஆனால் தற்போது அதுவே அவரது கடைசி நிகழ்ச்சியாகிவிட்டது. முதலில் தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டது. அங்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

ஆனால் கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் முக்கிய பிரபலங்கள் வருவதற்கு சிக்கல் இருந்ததால், விஜயகாந்தின் உடல் ராஜாஜி அரங்கில் வைக்கப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், தீவுத்திடலில் அவரது உடல் வைக்கப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

- Advertisement -

இவ்வளவு கூட்டத்தை யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள் என்று தான் கூற வேண்டும். அந்த அளவு விஜயகாந்தை கடைசி முறையாக பார்க்க ஏராளமானோர் கூடினர். நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் இறுதி அஞ்சலியில் பங்கேற்றனர்.

நடிகர் பிரபுவும், விஜயகாந்தின் பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு பேசிய அவர், தனது தந்தை சிவாஜி கணேசன் மறைந்த போது, இறுதி ஊர்வலத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டது. எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஊர்வலம் நடக்க வேண்டுமே என்ற பதட்டம் இருந்தது. அப்போது எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று விஜயகாந்த் எங்களிடம் கூறினார். அதன்படியே, முன்னின்று செயல்பட்டார். அவரது உதவியை நான் மறக்கவே மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சிவாஜி கணேசன் மறைவின்போது விஜயகாந்த் முன் நின்று செயல்பட்ட வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்