- Advertisement -
Homeபொழுதுபோக்குமாணவர்களின் போராட்டத்தில் அரசியல் கலந்துவிட்டது, பெற்றோர்கள் கவனமா இருக்க வேண்டும் - நடிகர் ரஞ்சித் விடுத்த...

மாணவர்களின் போராட்டத்தில் அரசியல் கலந்துவிட்டது, பெற்றோர்கள் கவனமா இருக்க வேண்டும் – நடிகர் ரஞ்சித் விடுத்த பகிரங்க எச்சரிக்கை!

- Advertisement -

திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் ரஞ்சித் பேசியதாவது, ஆரம்பத்தில் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதால் நான் நீட் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தேன். வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற அக்கறை இருக்கும். ஆனால் அரசு செய்ய மறுத்தால் அதை எதிர்த்து போராடுவது நம் உரிமை.

ஆனால் இப்போது நீட் தேர்வை மாணவர்கள் போராடுவதை பார்க்கும் போது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. பாதி பேருக்கு நீட் தேர்வு எதற்காக என்பதே புரியவில்லை. எதுக்கு நீட் எதுக்கு நீர்ட் என்று எதிர்க்கிறார்கள். நீட் வருவதற்கு முன்பு பணம் இருக்கும் செல்வந்தர் வீட்டுப்பிள்ளைகள் 12ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தாலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து டாக்டர் ஆக முடிந்தது.

- Advertisement -

ஆனால் பணமே இல்லாத ஏழை மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்திருந்தும் டாக்டராக முடியாத அவல நிலை இருந்தது. தகுதியான ஏழை மாணவன் டாக்டராக வேண்டும் என்பதற்காக தான் நீட் என்கிற தகுதித் தேர்வு கொண்டு வரப்பட்டது. இதில் சமத்துவம் தான் பரவ வேண்டுமே தவிர இத்தகைய போராட்டங்கள் அல்ல.

அதே நேரம் வினாத்தாள் கசிந்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதற்கு மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் போராடலாம். ஆனால் தற்போது சோசியல் மீடியாவில் உண்மை என்னவென்று தெரியாமல் ஏஐ மூலம் உருவாக்கப்படும் போலி வீடியோக்கள் பரப்பப்பட்டு மாணவர்களிடையே தேவையற்ற தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

- Advertisement -

போராட்டத்தில் ஒலிக்கும் பாடல்களை கேட்கும்போது அச்சமாக இருக்கிறது. மாணவர்களின் பிரச்சினையை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு அப்பாவி மாணவர்களின் பலியாக்க நினைக்கிறார்களோ என்ற பயம் எனக்கு வருகிறது. மாணவர்கள் போராட்டத்தால் நிச்சயம் அரசியல் கலந்திருக்கிறது.

எனவே அரசியல் கலக்கக்கூடிய எந்த ஒரு இடத்திற்கும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அனுப்பக் கூடாது என்று நடிகர் ரஞ்சித் பேசியிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகிய நிலையில் நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டமும் முடிவுக்கு வந்து விட்டது.

- Advertisement -

சற்று முன்