விஜய் டிவியில் லொள்ளு சபா காமெடி ஷோ மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகர் சந்தானம். பிறகு அவரை தனது வல்லவன் மற்றும் மன்மதன் போன்ற படங்களில் காமெடி ரோலில் நடிக்க வைத்தவர் நடிகர் சிம்பு. அந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை சந்தானத்துக்கு பெற்று தந்தது.
தொடர்ந்து சந்தானம் பல படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக மாறினார். பிறகு அவர் கதாநாயகனாகவும் நடிக்க ஆரம்பித்தார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் சந்தானம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து தில்லுக்கு துட்டு சபாபதி ஏ1 போன்ற படங்கள் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் தொடர்ந்து அவர் ஹீரோவாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சந்தானம் கூறியதாவது, நான் பள்ளியில் படிக்கும்போது ரொம்பவும் அமர்க்களம் கலாட்டா செய்வேன். லாஸ்ட் பெஞ்ச் மாணவன் நான். ஒழுங்காகவே படிக்க மாட்டேன். அதனால் என்னை பழிவாங்க வேண்டும் என்பதற்காக ஆண்டு விழாவில் பாடல் போட்டியில் என்னுடைய பெயரையும் ஆசிரியர்கள் கொடுத்து விட்டார்கள்.
என்னை கேட்கலாமலேயே என் பெயரை பாடல் போட்டிக்கு தந்து விட்டார்கள். நான் முடியாது என்று சொன்னாலும் அவர்கள் கேட்கவில்லை. என்னுடைய குரல் நன்றாக இருக்காது என்று தெரிந்தும் அவர்கள் என்னை பழி வாங்குவதற்காக அப்படி செய்தார்கள். நானும் வேண்டாவெறுப்பாக அந்த போட்டியில் கலந்துக்கொண்டேன்.
அந்த விழாவுக்கு பெரிய பெரிய அதிகாரிகள் எல்லாம் வந்திருந்தார்கள். நான் மேடைக்குச் சென்று தேசிய கீதம் பாடினேன். எல்லோரும் எழுந்து நின்றார்கள். பாடல் முடிந்தவுடன் அவர்கள் இருக்கையில் உட்கார முயன்றார்கள். அப்போது மீண்டும் நான் தேசிய கீதம் பாடினேன். அவர்கள் மீண்டும் எழுந்து நின்றார்கள் இப்படி மொத்தம் மூன்று முறை நடந்தது.
விழாவுக்கு வந்தவர்கள் எல்லாம் டென்ஷன் ஆகிவிட்டார்கள். மேடையில் இருக்கையில் அமர முடியாமல் அவதிப்பட்டனர். அங்கிருந்த ஆசிரியர்கள் நான் வேண்டும் என்றே இப்படி செய்வதை புரிந்துக்கொண்டு என்னிடம் வந்து நைஸாக பேசி மேடையில் இருந்து அழைத்து சென்று விட்டதார்கள் என்று அந்த நேர்காணலில் நடிகர் சந்தானம் ஜாலியாக கூறியிருக்கிறார்.





