- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென இயக்குனர் பா ரஞ்சித்தை சந்தித்த டாப் ஸ்டார் பிரசாந்த்... ஓ... இதுதான் காரணமா?...

திடீரென இயக்குனர் பா ரஞ்சித்தை சந்தித்த டாப் ஸ்டார் பிரசாந்த்… ஓ… இதுதான் காரணமா?…

- Advertisement -

90களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பிறந்தவர் நடிகர் பிரசாந்த். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான தியாகராஜனின் மகனான இவர், வைகாசி பொறந்தாச்சு என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இருப்பினும் செம்பருத்தி திரைப்படம் தான் இவருக்கு திரையுலகில் மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்தது.

தமிழ் சினிமாவில் இப்போது வரும் புது ஹீரோக்கள் சாக்லேட் பாய் என்று கொண்டாடப்பட்டாலும் அதற்கு விதை போட்டவர் பிரசாந்த் தான். இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்த அவர், மணிரத்னம் இயக்கத்தில் உருவான திருடா திருடா திரைப்படம் மூலம் பிரபலம் அடைந்தார்.

- Advertisement -

இதே போல் ஆணழகன் திரைப்படமும் பிரசாந்த் இருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. அவரது திரையுலக வாழ்விலேயே மைல் கல்லாக அமைந்த திரைப்படம் ஜீன்ஸ். உலக அழகி ஐஸ்வர்யா ராய் உடன், இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த அவர் புகழின் உச்சிக்கு சென்றார். அதுமட்டுமல்லாமல் ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவை ஆட்சி செய்யும் நடிகராக பிரசாந்த் அறியப்பட்டார்.

தொடர்ந்து ஜோடி, மஜ்னு, சாக்லேட் படத்தில் நடித்து வந்த அவருக்கு திடீரென ஒரு சரிவு ஏற்பட்டது. அவரது திருமண வாழ்க்கையும் பிரச்சனையாக, படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார் பிரசாந்த். அவர் தேர்ந்தெடுத்து நடித்த கதையும் வெற்றி பெறாமல் போனது.

- Advertisement -

2010 ஆம் ஆண்டிற்கு பிறகு அவர் நடித்த, பொன்னர் சங்கர், மம்பட்டியான், புலன் விசாரணை 2, சாகசம், ஜானி ஆகிய திரைப்படங்கள் வந்த இடம் தெரியாமல் மறைந்து போயின. இப்படியான சூழலில் அவர் தற்போது, விஜய்யின் கோட் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கிலும் அவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவர் இயக்குனர் பா ரஞ்சித்தை சந்தித்துள்ளார். பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜே பேபி என்னும் திரைப்படம் வரும் எட்டாம் தேதி வெளியாகிறது. இதன் பிரிவியூ ஸோவில் கலந்து கொண்ட பிரசாந்த், ரஞ்சித்தை நேரில் சந்தித்து கைகுலுக்கி பேசினார். ஏற்கனவே தியாகராஜனின் தகப்பன்சாமி திரைப்படத்தில் ரஞ்சித் பணி புரிந்திருந்தார். இந்த நிலையில் தற்போது இருவரும் சந்தித்திருக்கும் சூழலில், பிரசாந்தை வைத்து ரஞ்சித் படம் இயக்க வேண்டும் என சிலர் சமூக வலைதளத்தில் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்