- Advertisement -
Homeபொழுதுபோக்குதி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் டைம் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த நடிகர் பிரசாந்த்...

தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் டைம் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த நடிகர் பிரசாந்த் – அது சரிதான், ஆனா இந்த விஷயத்துல ஏமாத்திட்டாங்களே என புலம்பும் தளபதி ரசிகர்கள்

- Advertisement -

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. அப்பா, மகன் என்ற 2 ரோல்களில் விஜய் நடித்துள்ள இந்த படத்துக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தி கோட் படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், கிச்சா சுதீப், கஞ்சா கருப்பு, விடிவி கணேஷ், அஜ்மல், வைபவ், ரம்யாகிருஷ்ணன், லைலா, சினேகா, மீனாட்சி சௌத்ரி, கனிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்களை இந்த படத்தில் இணைய வைத்துள்ளார் வெங்கட்பிரபு.

- Advertisement -

மேலும் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் படத்தின் கிளைமாக்ஸில் வருகிறார். ஏஐ தொழில்நுட்பத்தில் மறைந்த நடிகர்கள் விஜயகாந்த், விவேக் இந்த படத்தில் தோன்ற உள்ளனர். அத்துடன் நடிகை திரிஷா இந்த படத்தில் விஜயுடன் ஒரு குத்தாட்ட பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். இன்றோ, நாளையோ அந்த பாடல் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

இப்படி ஏகப்பட்ட அம்சங்களுடன் இருக்கும் தி கோட் படத்தின் டிரெய்லர் கடந்த 17ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்ட நிலையில், ஒரு நிமிடத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. 24 மணி நேரத்தில் 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. இப்போது 45 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் தி கோட் டிரெய்லர் பார்வையிடப்பட்டு, 1.6 மில்லியன் லைக்ஸ் கிடைத்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தி கோட் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகர் பிரசாந்த் கூறுகையில், தி கோட் படம் 179 நிமிடங்கள், கிட்டத்தட்ட 3 மணி நேரம் திரையில் ஓடும் நீளமான படம். இந்த படத்தில் வெங்கட்பிரபுவின் திரைக்கதை மிக அருமையாக உள்ளது. நடித்த அனைவருக்குமே முக்கியமான கேரக்டர் தரப்பட்டுள்ளது. இது மிக நீளமாக இருந்தாலும் திரைக்கதை ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படாத வகையில் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி இந்த படம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. ஆனால் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் காலை 7 மணிக்கு படம் ரிலீஸாகி தியேட்டர்களில் அந்த மாநிலங்களில் ரசிகர்கள் படம் பார்க்க துவங்கி விடுவர். ஆனால் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்குதான் முதல் சிறப்பு காட்சியே துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தமிழ் சினிமா ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்