- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த படம் மட்டும் உங்களுக்கு பிடிக்கலேன்னா நான் மொட்டை அடிச்சிக்கறேன், ஓபன் சேலஞ்ச் விடுத்த பிரபல...

இந்த படம் மட்டும் உங்களுக்கு பிடிக்கலேன்னா நான் மொட்டை அடிச்சிக்கறேன், ஓபன் சேலஞ்ச் விடுத்த பிரபல நடிகை – இப்படியும் ஒரு துணிச்சலா?

- Advertisement -

சுமாரியா ஸ்டுடியோஸ் நிறுவனம் சகா; லைப் ஆஃப் சஞ்சு என்ற படத்தை சொந்தமாக தயாரித்துள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் நிஷாந்த் டோட்டி டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக ஷிவகுமார் கசாரம் நாயகியாக ஸ்வேதா லட்சுமண் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற செப்டம்பர் 4ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

நேற்று சஹா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற நடிகை ஸ்வேதா லட்சுமண் பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஸ்வேதா லட்சுமண் முதல் முறையாக சகா படத்தில் நாயகியாக அறிமுகமாகி நடித்திருக்கிறார்.

- Advertisement -

சஹா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஸ்வேதா லட்சுமண் பேசியதாவது, எங்களது படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படவில்லை. மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடிக்கவில்லை. ஆனால் கதை ரீதியாக மிகப்பெரியது. மேலும் பெரிய நம்பிக்கையுடன் இந்த படத்தை வெளியிட இருக்கிறோம்.

சஹா படம் உணர்ச்சிகளால் உருவாக்கப்பட்டது. இதில் வருவதை நீங்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் அனுபவித்திருப்பீர்கள். இதில் வலி தியாகம் உணர்ச்சிகள் இருக்கின்றன. ஒரு முடிவு எப்படி ஒருவரின் வாழ்க்கையை முழுவதுமாக மாற்றுகிறது என்று சொல்கிறது. இந்த படத்தை அனைவரும் பாருங்கள் என்று கெஞ்சி கேட்கவில்லை. மாறாக சவால் விடுகிறேன்

- Advertisement -

இந்த படத்தைப் பார்த்தால் நல்ல படம் என்று நீங்களே சொல்வீர்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பிரபலமான அமீர்பேட்டின் நடுப்பகுதியில் நின்று நான் மொட்டை அடித்துக் கொள்கிறேன். இதன் பொருள் நாங்கள் நல்ல கதையம்சம் உள்ள படத்தை எடுத்திருக்கிறோம் என்று பேசியிருக்கிறார்.

இந்த படத்தின் ஹீரோ நடிகர் ஷிவ குமார் பேசுகையில், சஹா படம் பிடிக்கவில்லை எனில் என்னை அலைபேசியில் அழைத்து திட்டுங்கள் என்று கூறியுள்ளார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. வழக்கமாக ஒரு படம் நன்றாக இருக்கும், கண்டிப்பா பாருங்கள் என்று மட்டுமே பலரும் பிரமோசனில் பேசுவார்கள். ஆனால் படம் பிடிக்கவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன் என்று படத்தின் நாயகி பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்