- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் ஹரி படத்தை அப்படியே ஓரம்கட்டி வைத்த நடிகர் பிரசாந்த்… அடுத்து அவர் கையில் எடுக்கும்...

இயக்குனர் ஹரி படத்தை அப்படியே ஓரம்கட்டி வைத்த நடிகர் பிரசாந்த்… அடுத்து அவர் கையில் எடுக்கும் சப்ஜெக்ட் வேற லெவலா இருக்குதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த். டாப் ஸ்டார் என்றுதான் அவர் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். வைகாசி பொறந்தாச்சு ஜீன்ஸ் ஜோடி கண்ணெதிரே தோன்றினாள் திருடா திருடா பார்த்தேன் ரசித்தேன் பல சூப்பர் ஹிட் படங்களில் பிரசாந் நடித்தார்.

ஒரு கட்டத்தில் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக மனைவி கிரஹலட்சுமியை விவாகரத்து செய்தார். அதனால் சினிமா பயணத்தில் சில சறுக்கல்களை சந்தித்த பிரசாந்த் பிறகு நடிப்பை விட்டு சில ஆண்டுகள் ஒதுங்கியிருந்தார். மீண்டும் விஜய் நடித்த தி கோட் படத்தில் அவரது நண்பராக பிரசாந்த் ரீ என்ட்ரி கொடுத்தார். அதே போல் அவரது அப்பா நடிகர் தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த அந்தகன் படமும் பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

தொடர்ந்து நடிகர் பிரசாந்த் இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆனார். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் பிரசாந்த் தமிழ் என்ற வெற்றிப் படத்தில் நடித்திருக்கிறார். சிம்ரன் ஜோடியாக நடித்திருந்தார். சிங்கம் சிங்கம் 2 கோவில் சாமி பூஜை தாமிரபரணி ஐயா போன்ற வெற்றிப் படங்களை தந்தவர் ஹரி. மீண்டும் பிரசாந்த் – ஹரி காம்போ படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இப்போது அந்த படம் படப்பிடிப்பு துவங்காமல் அப்படியே முடங்கிப் போயுள்ளது. இயக்குனர் ஹரியிடம் கதை கேட்ட நடிகர் பிரசாந்த், இந்த கதை இப்போதைய சூழலுக்கு ஏற்ப டிரண்டிங் ஆக இல்லை என்று கூறி லேட்டஸ்ட் டிரெண்டிங்கில் ஒரு கதை சொல்லுங்கள் என்று மறுத்திருக்கிறார். அதனால் அந்த படம் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

தெலுங்கில் மாஸ் ஹிட் ஆன கோர்ட் என்ற படத்தை பிரசாந்தின் அப்பா தியாகராஜன் இப்போது தமிழில் ரீ மேக் செய்து இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் பிரசாந்த் முக்கியமான ஒரு கேரக்டரில் வக்கீலாக நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு ஹரி இயக்கும் படத்துக்கு முன்பாக ஒரு படத்தை உருவாக்க நடிகர் பிரசாந்த் ஆர்வமாக உள்ளார்.

தனது அப்பா தியாகராஜன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் நடிகர் பிரசாந்த் ஒரு பான் இந்தியா படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் நடிகை ஐஸ்வர்யா ராய் போன்றவர்களை நடிக்க வைக்கவும் பிரசாந்த் முடிவு செய்திருக்கிறார். பல மொழிகளில் வெளியாகும் ஒரு திரைப்படமாக இந்த படத்தை உருவாக்கவும் தனது தந்தை நடிகர் தியாகராஜனிடம் பிரசாந்த் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்