- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை தமிழ் படம் பண்ண சொன்னா நிச்சயமா பண்ண மாட்டேன், அதுக்கு காரணம் இதுதான் -...

என்னை தமிழ் படம் பண்ண சொன்னா நிச்சயமா பண்ண மாட்டேன், அதுக்கு காரணம் இதுதான் – வெளிப்படையாக பேசிய நடிகர் பிருத்விராஜ்!

- Advertisement -

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் பிருத்விராஜ் இப்போது பிரபல இயக்குனராகவும் மாறி விட்டார். அவர் இயக்கும் படங்களுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. லூசிபர் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு அதன் 2ம் பாகமாக எல்2 எம்புரான் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை காண இந்திய ரசிகர்கள் மிக ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

எம்புரான் படத்தை இயக்கியது மட்டுமின்றி அந்த படத்தில் முக்கிய கேரக்டரில் இயக்குனர் பிருத்விராஜூம் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் பிரதான கேரக்டரில் நடிகர் மோகன்லால் நடித்திருக்கிறார். இந்த படம் மாஸ் ஹிட் படமாக இந்திய அளவில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பிருத்விராஜ் இயக்குனராக ஜெயித்துக்கொண்டிருக்கிறார்.

- Advertisement -

மலையாளத்தில் மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பிருத்விராஜ் ஒரு நடிகராக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். கனா கண்டேன் படத்தில் வில்லனாக அறிமுகமான அவர் தொடர்ந்து மொழி கண்ணாமூச்சி ஏனடா அபியும் நானும் இராவணன் சத்தம் போடாதே நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவர்.

தமிழில் பிருத்விராஜ் கடைசியாக நடித்த காவியத் தலைவன். இதில் நடிகர் சித்தார்த் நாயகனாக நடித்திருந்தார். கடந்தாண்டில் வெளியான ஆடுஜீவிதம் படம் பிருத்விராஜ் நடிப்புக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தந்தது. அதே போல் எல்2 எம்புரான் படம் மீதும் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் பிருத்விராஜ் ஒரு நேர்காணலில் கூறியதாவது, யாராவது என்கிட்ட தமிழ்ப்படம் பண்ணுங்க என்று கதை சொன்னால் நான் அவங்க கிட்ட நான் கடந்த 2014ம் ஆண்டில் கடைசியாக காவியத்தலைவன் என்னும் தமிழ் படத்தில் நடித்தேன்.அதற்கு எனக்கு தமிழ்நாடு அரசின் மாநில விருது கிடைத்தது. இப்போது நான் ரொம்ப சந்தோஷமாக தான் இருக்கிறேன். இதுக்கு மேல் ஒரு தமிழ் படம் பண்ணினால் அது அந்த படத்தை விட ரொம்ப பெட்டரா பண்ணனும். இல்லனா நான் இப்படியே இருந்துக்கிறேன் என்று சொல்வேன்.

ஏனென்றால் தமிழ் சினிமா எனக்கு ஒரு ஷாப்ட் கார்னர் மாதிரி. என்னுடைய கேரியரில் கஷ்டமான காலகட்டத்தில் தமிழ் சினிமா தான் என்னை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. தமிழ் சினிமா மீது நான் அந்த அளவுக்கு காதல் மற்றும் அன்பு வைத்திருக்கிறேன் என்று அந்த நேர்காணலில் நடிகர் பிருத்விராஜ் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அவரது பேச்சு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிக பாராட்டுகளை பெற்று வருகிறது.

- Advertisement -

சற்று முன்