தமிழ் சினிமாவில் நடிப்பு பல்கலைக் கழகம் என்று அழைக்கப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தாதா சாகிப் பால்கே செவாலியே போன்ற உலகின் மிகச்சிறந்த விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர். இப்போதும் நடிப்பு என்றால் அது இலக்கணமாக கூறப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான்.
சமீபத்தில் அவரது மூத்த மகன் ராம்குமாரின் மகன் துஷ்யந்த், தயாரிப்பு நிறுவனத்திடம் வாங்கிய கடனுக்காக தி நகர் போக் ரோட்டில் உள்ள சிவாஜி கணேசன் வாழ்ந்து மறைந்த அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த வீடு என்னுடைய தம்பி நடிகர் பிரபுவுக்கு மட்டுமே சொந்தமானது என, ராம்குமார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருக்கிறார். எனக்கும் என் மகன் துஷ்யந்துக்கும் என் குடும்பம் சார்ந்தவர்களுக்கு அன்னை இல்லம் சொந்தமில்லை என்று அவர் கூறி, அந்த வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்யுமாறு கோரியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிவாஜி கணேசன் சினிமாவில் பிஸியாக நடித்த காலகட்டத்தில் அவருடன் பல படங்களில் நடித்தவர் நடிகவேள் எம்ஆர் ராதா. அதனால் இருவருக்கும் நல்ல நட்பும் நெருக்கமும் அப்போது உண்டு. நடிகர் எம்ஆர் ராதாவை அண்ணா என்று அழைப்பதுதான் சிவாஜி கணேசன் வழக்கம்.
சமீபத்தில் நடிகர் எம்ஆர் ராதாவின் மகன் நடிகர் ராதாரவி கூறியதாவது, சின்னதம்பி படத்தில் நடித்த பிறகு, ஒருமுறை நடிகர் திலகம் சிவாஜி கணேசனை நேரில் சந்தித்தேன். வாடா அண்ண மவனே என்று என்னை அழைத்தார். என் அப்பாவை அண்ணா என்று அவர் அழைத்தவர் என்பதால் என்னை அண்ண மவனே என்றுதான் அழைப்பார்.
நல்லா நடிச்சிருக்கேடா சின்னதம்பியில, படம் பார்த்தேன். என் தங்கச்சி இருந்து என் வீட்டுல இருந்தவன் எவனாவது விரும்பி இருந்தான்னா இதைத்தான்டா நான் பண்ணுவேன். தொலைச்சி எடுத்துப்புடுவேன். ரொம்ப நல்லா பண்ணுனே. அந்த பீலிங் ரொம்ப அழகா கொண்டாந்தேடா என்று என்னை சிவாஜி கணேசன் பாராட்டினார் என்று அந்த நேர்காணலில் நடிகர் ராதாரவி கூறியிருக்கிறார்.





