- Advertisement -
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தலின் போது நாம் தமிழர் கட்சி பேனர் அகற்றிய விவகாரம், காவல் நிலையம் முற்றுகை தமிழக முதல்வர் வரும் வழியில் ஆர்ப்பாட்டம் போன்ற விவகாரங்களை அடுத்து தாராபுரம் போலீசார் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா, கார்த்திகாவின் கணவர் உட்பட 6 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு அவர்களை கைது செய்துள்ளனர். இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, குற்றவாளிகளை காப்பாற்றி போராடுபவர்களை கைது செய்வதில் இப்போது இரண்டே இரண்டு பேர் நடுவில் தான் போட்டியே. ஒன்று டெல்லி பாஜக. இன்னொன்று தமிழ்நாட்டில் தவெக என்று அந்த பதிவில் கூறியிருக்கிறார்.





