- Advertisement -
கடந்த 2005ம் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடித்து திரைக்கு வந்த படம் திருப்பாச்சி. இயக்குனர் பேரரசு இயக்கிய இந்த படத்தில் விஜயுடன் திரிஷா பசுபதி மல்லிகா லிவிங்ஸ்டன் கோட்டா சீனிவாசராவ் பெஞ்சமின் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. 21 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பாச்சி படம் வருகிற டிசம்பர் 25ம் தேதி ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு பெரிய அளவில் வசூலித்த நிலையில் திருப்பாச்சி படமும் பெரிய வசூலை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.





