- Advertisement -
Homeபொழுதுபோக்குநெல்சன், ஹெச் வினோத், லோகேஷ் கனகராஜ்லாம் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது இல்ல - வருஷா வருஷம்...

நெல்சன், ஹெச் வினோத், லோகேஷ் கனகராஜ்லாம் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது இல்ல – வருஷா வருஷம் பேய் படங்களை மட்டுமே கொடுக்கும் பிரபல நடிகர் அப்செட்…

- Advertisement -

ஆரம்பத்தில் திரைப்படப் பாடலுக்கு நடனம் ஆடி வந்தவர் ராகவா லாரன்ஸ். தனது திறமையின் மூலம் சிறிது சிறிதாக வளர்ந்து நடன இயக்குனராக மாறிய அவர், பல்வேறு திரைப்படங்களுக்கும் பணியாற்றி வந்தார். இந்த நேரத்தில் அவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதைத்தொடர்ந்து டான்ஸ் மாஸ்டராக இருந்த அவர், நடிகராக அவதாரம் எடுத்தார். ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த திரைப்படங்கள் பல தோல்வியையே கொடுத்தன. அற்புதம், பார்த்தாலே பரவசம், ராஜாதி ராஜா போன்ற திரைப்படங்கள் வந்த இடம் தெரியாமல் மறைந்து போயின.

நடிப்பு சரியாக கிளிக் ஆகாததால், இயக்குனராக அவதாரம் எடுத்த ராகவா லாரன்ஸ், தெலுங்கில் நாகர்ஜுனாவை வைத்து முதல் திரைப்படத்தை இயக்கினார். தொடர்ந்து, தமிழுக்கு வந்த அவர் முனி திரைப்படத்தை கொடுத்தார். ஹாரர் ஜானரில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், நல்ல விமர்சனத்தை பெற்றது. அதுமட்டுமல்லமல் முதன்முறையாக ராகவா லாரன்ஸுக்கு இந்த திரைப்படம் ஹிட் கொடுத்தது.

இந்த யுக்தியை சரியாக பயன்படுத்திய ராகவா லாரன்ஸ், காஞ்சனா பட சீரிஸ்களை எடுத்து தள்ளினார். இருட்டுக்கு பயப்படும் நாயகன், அவன் தங்கி இருக்கும் வீட்டில் பதுங்கி இருக்கும் பேய், பேயின் பரிதாபமான பிளாஷ்பேக்கை கண்டு மனம் உருகும் நாயகன், பிறகு பேய்க்கே உதவ முடிவெடுக்கும் காட்சி என ஒரே விதமான கதையை அவர் திருப்பி திருப்பி எடுத்தாலும், அதில் சுவாரசியம் சிறிதும் குறையாமல் இருந்ததால் காஞ்சனா படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாவது பாகம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

ஹாரருடன், நகைச்சுவையும் அதில் இருந்ததால் திரைக்கதை சுவாரசியமாக அமைய ராகவா லாரன்ஸ் முயற்சிக்கு மக்கள் வரவேற்பு கொடுத்தனர். இதனை நம்பி காஞ்சனா படத்தின் மூன்றாவது பாகத்தில் நடித்த ராகவா லாரன்ஸ், தோல்வி அடைந்தார். அதில் சலிப்பூட்டும் திரைக்கதை மேலோங்கி இருந்ததால் படத்தை மக்கள் வரவேற்கவில்லை. தற்போது அவர் சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருக்கிறார். வரும் 28ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பேசி இருக்கும் அவர், இப்போது இருக்கும் இயக்குனர்களை பாராட்டினார். இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், எச் வினோத், நெல்சன் ஆகியோர் இயக்கும் படங்கள் புதுமையாக உள்ளது. அவர்களது திரைப்படம் சூப்பரா இருக்கு. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், திரைக்கதை ஆக்சன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்க. நாமளும் அவங்களுக்கு ஏற்றது போல் மாற வேண்டும் என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் இளம் இயக்குனர்கள் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறியது பேசு பொருள் ஆகியுள்ளது. எப்போதுமே பேய் படங்களை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கும் இவர் கதையை பற்றி கூறலாமா என்று பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

சற்று முன்