- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த விஷயத்தை புரிஞ்சுக்கிட்டா என்னை மாதிரியே நீங்களும் மத்தவங்களுக்கு உதவுவீங்க… - நடிகர் ராகவா லாரன்ஸ்...

இந்த விஷயத்தை புரிஞ்சுக்கிட்டா என்னை மாதிரியே நீங்களும் மத்தவங்களுக்கு உதவுவீங்க… – நடிகர் ராகவா லாரன்ஸ் சொன்ன சீக்ரட்!

- Advertisement -

கடவுள் நம்பிக்கை எனக்கு கிடையாது; கடவுள் இருக்கிறாரா என்றும் எனக்கு உறுதியாக தெரியாது. ஆனால் நான் கஷ்டப்படும்போது நெருக்கடியில் சிக்கி தவிக்கும் போது எனக்கு உதவும் யாருமே எனக்கு கடவுள்தான் என்று சிலர் கூறுவதுண்டு. ஏனெனில் உதவி என்பதே கடவுள் ரூபத்தில் ஒருவர் மற்ற ஒருவருக்கு செய்கிற நன்மையாக தான் இங்கே பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் கோடி கோடியாக செல்வம் இருந்தாலும் கஷ்டப்படுகிற பிறருக்கு கொடுக்கிற மனம் மட்டும் இல்லை என்றால் அவனும் பிச்சைக்காரனை விட கீழான நிலையில் இருப்பவன்தான். கஷ்டப்படுபவனை பார்த்துவிட்டு கண்டும் காணாமல் செல்பவர்கள் நிறைந்த இந்த உலகில் ஒரு சிலர் மட்டுமே அவர்களுக்கு தானாக உதவ முன்வருகின்றனர்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் அப்படிப்பட்ட ஒருவர்தான் நடிகர் ராகவா லாரன்ஸ். இவரை விட மிக அதிகமாக சம்பளம் வாங்கும் நூற்றுக்கணக்கான கோடிகளை சம்பாதிக்கும் பல நட்சத்திர நடிகர்கள் இருந்தாலும் அவர்களை விட ஒரு விஷயத்தில் இவர் உயர்ந்த துருவ நட்சத்திர நடிகராக இருப்பது இவரது உதவும் மனம் கொண்ட குணத்தால்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் மாற்றம் என்ற சேவை அமைப்பை துவங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை விவசாயிகளுக்கு 10 டிராக்டர்களை தனது சொந்த செலவில் வழங்கினார். அதைப் பார்த்து நடிகர் எஸ்ஜே சூர்யாவும் மாற்றம் சேவை அமைப்பின் மூலம் ஒரு டிராக்டரை தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்தார்.

- Advertisement -

சமீபத்தில் கூலி வேலைக்கு செல்லும் பெண் ஒருவர், டப்பாவில் போட்டு மண்ணில் குழி தோண்டி புதைத்து வைத்து ஒரு லட்சம் ரூபாய் பணம் கரையான் அரித்து வீணாகிப் போனது. அந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை, ராகவா லாரன்ஸ் அந்த பெண்ணை நேரில் வரவழைத்து கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

கஷ்டப்படும் மக்களுக்கு இப்படி உதவுவது ஏன் என்பது குறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியதாவது, நாம ரொம்ப காலம் இந்த உலகத்துல இருக்க மாட்டோம்னு முதல்ல புரிஞ்சிக்கணும். ரொம்ப நாள் இருக்க முடியாதுங்கறத புரிஞ்சுகிட்டா ஆசை அதிகமாக இருக்காது. ஆசை இல்லைன்னா நமக்கு மத்தவங்களுக்கு கொடுக்கணும் என்கிற எண்ணம் வரும். குடுக்குற எண்ணம் வந்தா அன்பு பிறக்கும். அன்பு பிறந்தால் நாம எல்லோருமே ஒண்ணுதான்னு தெரிய ஆரம்பிக்கும். அவ்வளவுதான் வாழ்க்கை என்று நடிகர் ராகவா லாரன்ஸ் புது தத்துவமே கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்