- Advertisement -
Homeபொழுதுபோக்குபுரட்சித் தலைவர் எம்ஜிஆருக்காக எழுதிய கதையில் ரஜினி நடித்த சூப்பர் ஹிட் படம் - இதுதான்...

புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்காக எழுதிய கதையில் ரஜினி நடித்த சூப்பர் ஹிட் படம் – இதுதான் தேவர் தயாரித்த கடைசி படமா?

- Advertisement -

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடித்த பல படங்களை தயாரித்தவர் சாண்டோ சின்னப்ப தேவர். எம்ஜிஆர் நடித்த பல வெற்றிப் படங்களை தேவர் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. அதனால் எம்ஜிஆர், தேவரை முதலாளி என்றுதான் அன்போடு அழைப்பார். பல படங்களில் இருவரும் சண்டை காட்சிகளில் இணைந்து நடித்துள்ளனர். எம்ஜிஆர் மீது அளவற்ற அன்பும் மரியாதையும் கொண்டவர் தேவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 1970களில் எம்ஜிஆர் நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்க தேவர் முடிவு செய்தார். தேவர் பிலிம்ஸ் தயாரிக்கும் அந்த படத்தின் ஸ்கிரிப்ட் தயாரான நிலையில் மறுபிறவி என்ற பெயரில் அந்த படம் உருவாக இருந்தது. ஆனால் எம்ஜிஆர் அப்போது அரசியல் களத்தில் பிஸியாக இருந்ததால் அந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை.

- Advertisement -

அதன்பிறகு அந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க முடிவானது. தேவர் பிலிம்ஸ் சார்பில் தயாரான அந்த படத்துக்கு மறுபிறவி என்ற பெயர் மாற்றப்பட்டு தாய் மீது சத்தியம் என டைட்டில் வைக்கப்பட்டது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் ஸ்ரீபிரியா தெலுங்கு நடிகர் மோகன்பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.

நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தில் கௌபாய் கேரக்டரில் முதன் முறையாக நடித்திருந்தார். வழக்கமாக கௌபாய் கேரக்டரில் ஜெய்சங்கர் நடித்து பெரிய அளவில் புகழ் பெற்றார். அந்த வகையில் ரஜினிகாந்த் கௌபாய் கேரக்டரில் தாய் மீது சத்தியம் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்த போது திடீரென படத்தின் தயாரிப்பாளர் தேவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு குணமடைந்தார். ஆனால் சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி 1978ம் ஆண்டில் தேவர் உயிரிழந்தார்.

அதனால் தேவர் பிலிம்ஸ் தயாரித்த கடைசி படம் ரஜினிகாந்த் நடித்த தாய் மீது சத்தியம் படம்தான். இந்த படம் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்ற நிலையில் அதை காண தயாரிப்பாளர் தேவர் உயிருடன் இல்லை என்பது கசப்பான உண்மை. எம்ஜிஆருக்காக எழுதிய கதையில் ரஜினி கௌபாய் கேரக்டரில் நடித்த படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்