- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விவகாரங்கள் என்றாலே, அதுதான் பதில், பாயும் புலி ரஜினிகாந்த் இப்படி பதுங்குவது சரிதானா? -...

அந்த விவகாரங்கள் என்றாலே, அதுதான் பதில், பாயும் புலி ரஜினிகாந்த் இப்படி பதுங்குவது சரிதானா? – பஞ்ச் டயலாக் எல்லாம் சினிமாவில்தான், கலாய்க்கும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 73 வயதில் வீட்டில் இருக்கும் ஒருவரை தாத்தா என்பார்கள், பெரியவர் என்பார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் மட்டும் அவரை சூப்பர் ஸ்டார் என அழைத்து கதாநாயகனாக கொண்டாடுகிறார்கள். அதனால் 73 வயதிலும் ஜெயிலர், வேட்டையன்,. கூலி என ஹீரோவாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் இருந்தே பல விதங்களில் விமர்சனங்களுக்கு ஆளானவர். சர்ச்சையிலும் சிக்கியவர். கடந்த 1990களில் கர்நாடகா காவிரி பிரச்னையில் ஒற்றை ஆளாக உண்ணாவிரதம் இருந்து பரபரப்பை ஏற்படுத்தியவர். அரசியலுக்கு வருவேன், வரமாட்டேன் என இரண்டு விதமாக பேசி ரசிகர்களை குழப்பி விட்டவர். கடைசி வரை திரையில் மட்டுமின்றி, நிஜத்திலும் ரசிகர்களிடம் நடித்து வருகிறார் என பல விமர்சனங்கள் அவர் மீது உண்டு.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்தை பொருத்த வரை, சினிமாவில் ஆத்மார்த்தமான ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும், மனதுக்கு திருப்தி தரும் கேரக்டரில் என்னை வெளிப்படுத்த வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. கமர்ஷியல் என்ற பெயரில் ஹீரோயிசம் காட்டும் குப்பை படங்களை தர வேண்டும். அதன்மூலம் பல நூறு கோடி ரூபாய் கல்லா கட்ட வேண்டும். ரசிகர்களை ஸ்டைல் காட்டி, ஆக்சன் காட்டி ஏமாற்ற வேண்டும்.

அதற்கேற்ப கதைகளை கொண்டு வரும் இயக்குனர்களுக்கு வாய்ப்பளிப்பார். போலீஸ் அதிகாரி அல்லது தாதா என்ற 2 வேடங்களில் மட்டுமே கெத்து காட்டி பெரிய மாஸ் காட்டி நடித்து ரசிகர்களை ஏமாற்ற முடியும் என்பதால், அந்த கேரக்டர்களிலேயே கடந்த 10 ஆண்டுகளாக ரஜினி நடித்து வருகிறார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் சமீபகாலமாக விமான நிலையத்துக்கு வரும் ரஜினியை செய்தியாளர்கள் சந்தித்தால், அவர் நடிக்கும் படம் குறித்து கேட்டால் சந்தோஷமாக பேசுவார். அதே நேரத்தில் ஹேமா கமிட்டி விவகாரம், திருப்பதி லட்டு பிரச்னை, விஜய் அரசியல் வருகை என்றெல்லாம் கேள்வி எழுப்பினால், நோ கமெண்ட்ஸ், ஸாரி, என்னிடம் அரசியல் பத்தி கேட்காதீங்க என்று சொல்லி விட்டு உடனே எஸ்கேப் ஆகி விடுவார்.

நாட்டில் என்ன பிரச்னை நடந்தால் அதைப்பற்றி நான் ஏன் கவலைப்படணும், நான் ஏன் கருத்து சொல்லணும் என்பது போல்தான் ரஜினியின் செயல்பாடு இருக்கிறது. பாயும் புலி என்ற படத்தில் நடித்த ரஜினிகாந்த், இப்போது செய்தியாளர்களின் சில கேள்விகளுக்கு பதுங்குகிறாரே என, ரசிகர்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர். ரஜினியை பொருத்த வரை நடிக்க முடியும் வரை நடித்து, இன்னும் சில ஆயிரம் கோடிகளை, தன் குடும்பத்துக்கு சம்பாதித்துவிட வேண்டும் என்பதுதான் அவரது லட்சியமாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்