- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர்கள் திறமையால் உழைப்பால் ஜெயிக்கவில்லை, அதனால்தான் ஜெயித்தார்கள் - பாரதிராஜா கே பாக்யராஜ் குறித்து பேசிய...

அவர்கள் திறமையால் உழைப்பால் ஜெயிக்கவில்லை, அதனால்தான் ஜெயித்தார்கள் – பாரதிராஜா கே பாக்யராஜ் குறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர இயக்குனர்களாக பல வெற்றிப் படங்களை இயக்கியவர்கள் பாரதிராஜா மற்றும் அவரது சீடர் கே பாக்யராஜ். கே பாக்யராஜ் இயக்குனராக மட்டுமின்றி அவர் இயக்கிய படங்களில் அவரே ஹீரோவாகவும் நடித்தார். ஒரு கட்டத்தில் பாரதிராஜாவும் நடிகராகி மாறி பல படங்களில் நடித்தார்.

அவர்கள் இருவரும் சமீபத்தில் மறைந்த நிலையில் பெப்சி மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இயக்குனர்கள் சங்கம் நடிகர் சங்கம் உள்ளிட்ட திரைப்பட சங்கங்கள் இணைந்து சென்னை கலைவாணர் அரங்கில் சமீபத்தில் மறைந்த திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் கே பாக்யராஜ் ஆகியோருக்கு ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம் என்ற நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.

- Advertisement -

இந்த நிகழ்வில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ராஜ்யசபா எம்பி நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் கே பாக்யராஜின் திருவுருவ சிலைகளை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, கே பாக்யராஜின் ஐம்பதாவது ஆண்டு பொன்விழாவில் நான் அளித்த தங்க செயினை அவர் கடைசிவரை அணிந்திருந்ததை பூர்ணிமா இங்கு சொன்ன போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

பாரதிராஜா ஒருவரிடம் இருக்கும் விஷயங்களை வெளியே கொண்டு வந்து அதை எப்படி ஒரு படைப்பாக மாற்றுவது என்று யோசிப்பார். பாக்யராஜிடம் கதை சொன்னால் ஒருபுறம் அந்த கதையை உள்வாங்கிக் கொண்டு மறுபுறம் அந்த கதையை எப்படி வேறு விதமாக கொண்டு போகலாம் என்று யோசிப்பார். இரண்டையும் ஒரே நேரத்தில் சிந்திக்க கூடியவர் பாக்யராஜ். அதனால் தான் அவர் திரைக்கதை மன்னன்.

- Advertisement -

கேமராவை கிராமங்களைச் எடுத்துச் சென்றவர் பாரதிராஜா. பழைய திரைப்படங்களில் பிரமாண்டமான காட்சிகள் இருக்கும். அதையெல்லாம் மாற்றியர் பாரதிராஜா. கிராமங்களில் டெய்லர் பார்பர் போன்ற கதாபாத்திரங்களை வைத்து படத்தை உருவாக்கி வெற்றி பெற்றார். ரஜினிகாந்த் ஹீரோவாகி முன்பிருந்த பிம்பங்களை உடைத்தார் என்பது இல்லை. பாரதிராஜா தான் அதை உடைத்தார்.

நினைத்துப் பார்க்க முடியாததை செய்து காட்டியவர்கள் இந்த இரண்டு ஜாம்பவான்களும். பாரதிராஜாவின் முதல் மரியாதை படம் எனக்கு மிகவும் பிடிக்கும். பாரதிராஜாவும் பாக்யராஜூம் கடவுள் அனுப்பிய குழந்தைகள். தங்களது திறமையாலும் உழைப்பாலும் முன்னேறினார்கள் என்றால் நான் நம்ப மாட்டேன். எத்தனையோ திறமைசாலிகள் உழைக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் சந்தர்ப்பம் கிடைத்தவர்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். அந்த சந்தர்ப்பத்தை கடவுள் தான் அளிப்பார் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

- Advertisement -

சற்று முன்