நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வேட்டையன். கடந்தாண்டில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களுடன் ரூ. 265 கோடி வரை வசூலித்தது. கடந்தாண்டில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூலிடம் 3ம் இடம் பிடித்தது வேட்டையன் படம் என்பது குறிப்பிடத்தக்கது. முதலிடத்தை தி கோட் 2ம் இடத்தை அமரன் படங்கள் பெற்றன.
தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து முடித்திருக்கிறார். இது அவரது 171வது படமாகும். இந்த படத்தில் அமீர்கான் சத்யராஜ் உபேந்திரா சவுபிர் சாஹிர் நாகர்ஜூனா ஸ்ருதிஹாசன் நித்யா ராம் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இதுவரை தமிழ் சினிமாவில் எந்த படமும் ரூ. 1000 கோடி வசூலை எட்டவில்லை. வழக்கமாக ரஜினி விஜய் படங்களே அத்தகைய ஒரு மகத்தான சாதனையை நிகழ்த்த வாய்ப்புள்ளதாக கோலிவுட் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் – ரஜினி காம்போவில் உருவான கூலி படம் ரூ. 1000 கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூலி படத்துக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் மோகன்லால் சிவராஜ்குமார் தெலுங்கு நடிகர் பாலய்யா என்கிற பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் நடிப்பதாக கூறப்படுகிறது. எஸ்ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார்.
ஜெயிலர் படம் அபார வெற்றி பெற்ற நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் 2 படத்தை மிக பிரமாண்டமாக தயாரிக்கிறது. ரஜினி இதுவரை அவர் நடித்த எந்த படத்திலும் 2ம் பாகத்தில் நடித்தது இல்லை. இதுவே முதல் படமாகும். சென்னையை தொடர்ந்து கோவை மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று சென்னையில் இருந்து கோவை வந்த நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரஜினிகாந்த் கூறுகையில், கோவையில் 20 நாட்கள் ஜெயிலர் 2 படப்பிடிப்பு நடக்கிறது. அதில் பங்கேற்ற வந்துள்ளேன். படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை. அஜீத்குமார் நடித்த குட்பேட் அக்லி படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள், காட் பிளஸ் யூ என்று கூறிவிட்டுச் சென்றார்.





