- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவன் நடிப்புல என்னையே தூக்கி சாப்பிடுவான் போல இருக்குடா - படையப்பா ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியிடம்...

அவன் நடிப்புல என்னையே தூக்கி சாப்பிடுவான் போல இருக்குடா – படையப்பா ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியிடம் வெளிப்படையாக சொன்ன நடிகர் திலகம்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளான இன்று படையப்பா படம் தமிழ்நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரி ரிலீஸ் செய்யப்பட்டு ஹவுஸ்புஃல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த 1999ம் ஆண்டில் வெளியான இந்த படம் 26 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இப்போது ரி ரிலீஸ் ஆகியிருப்பதால் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக 2000ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் யாரும் இந்த படத்தை அப்போது தியேட்டர்களில் பார்க்க வாய்ப்பு இருந்திருக்காது. டிவியில் மட்டுமே பலரும் படையப்பா படத்தை பார்த்த நிலையில் இப்போது மீண்டும் திரையரங்குகளுக்கு படையப்பா படம் வந்திருப்பதால் இந்த படத்தை ரஜினியின் அன்றைய ரசிகர்களும் 2000க்கு பிறகு பிறந்த புதிய இளைய ரசிகர்களும் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் படையப்பா படம் ரி ரிலீஸ் குறித்து சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அப்போது அவர் கூறியதாவது, படையப்பா படப்பிடிப்பில் சுமார் 2000 பேர் அங்கு இருக்கின்றனர். படப்பிடிப்பு குழுவினர் ஷூட்டிங் வேடிக்கை பார்ப்பவர்களும் திரண்டு இருக்கின்றனர்.

அப்போது ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் நடிகர் சிவாஜி கணேசன் தனியாக இருந்துக்கொண்டு வசனம் எழுதிய பேப்பர்களை கவனித்து படித்துக் கொண்டு இருக்கிறார். வசனங்களை படித்து படித்து மனப்பாடமும் செய்துக்கொண்டு இருந்தார். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இந்த வயதில் ஏன் இவர் இவ்வளவு சிரமப்பட்டு கொண்டிருக்கிறார் என்று தோன்றியது.

- Advertisement -

அப்போது சிவாஜி என்னிடம், டேய் மணிவண்ணன் ரொம்ப நல்லா நடிக்கிறான்டா. என்னையே நடிப்புல தூக்கி சாப்பிட்டுடுவான் போல இருக்கு. சுத்தி இத்தனை பேர் நின்னு பார்த்துட்டு இருக்கும் போது வசனங்களை நான் சரியாக பேசலைன்னு என்ன பெரிய நடிகர், கேமரா முன்னாடி நின்னு ஒழுங்கா வசனம் கூட சரியாக பேசலைன்னு பார்க்கறவங்க சொல்லிடுவாங்க.

அதனால் எல்லாத்தையும் படித்து வசனம் எல்லாம் மனப்பாடம் பண்ணிட்டு இருக்கேன் என்று சொன்னார். அவர் சொன்னதை கேட்டதும் எவ்வளவு பெரிய நடிகர், எத்தனை காலமாக நடிக்கிறார். இப்படி சொல்கிறாரே என வியந்து போனேன். இந்த படத்தில் நடித்த சிவாஜி சார் சௌந்தர்யா மணிவண்ணன் போன்றவர்கள் இப்போது உயிருடன் இல்லை. அவர்களுக்கு இந்த படத்தை சமர்பிக்கிறேன் என்று ரஜினிகாந்த் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்