- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனி அந்த மாதிரி கேரக்டர் என்றால் எனக்கு டபுள் ஓகே தான்… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்...

இனி அந்த மாதிரி கேரக்டர் என்றால் எனக்கு டபுள் ஓகே தான்… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திடீர் முடிவு!

- Advertisement -

சமீபத்தில் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், நானும் எவ்வளவு நாள்தான் நல்லவன் மாதிரியே நடிக்கிறது என்று மங்காத்தா படத்தில் அஜீத்குமார் பேசிய வசனத்தை குறிப்பிட்டு சொன்னார். அதாவது கூலி படத்தில் வில்லன் கேரக்டரில் நடிகர் நாகர்ஜூனா நடிக்க முன்வந்ததை அப்படி குறிப்பிட்டு ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

ஆனால் உண்மையில் ரஜினிகாந்தின் மன நிலையும் அந்த டயலாக் போலதான் இருக்கிறது. ஆரம்பத்தில் நடிக்க வந்த புதிதில் பல படங்களில் நடிகர் ரஜினிகாந்த் நெகட்டிவ் ரோல்களில்தான் அதிகமாக நடித்தார். குறிப்பாக பாரதிராஜா இயக்கத்தில் கமல் ஸ்ரீதேவி நடித்த 16 வயதினிலே படத்தில் ரஜினிகாந்த், பரட்டை என்ற கேரக்டரில் வில்லனாக தான் நடித்திருந்தார்.

- Advertisement -

அடுத்து மூன்று முடிச்சு படத்திலும் நடிகர் ரஜினிகாந்த் வில்லனாக தான் நடித்திருப்பார். 2 வேடங்களில் ரஜினிகாந்த் நடித்த பல படங்களில் ஒருவர் நாயகனாக ஒருவர் வில்லனாக இருப்பார். அந்த படங்களின் கிளைமேக்ஸில் அந்த வில்லன் திருந்துவார் அல்லது கொல்லப்படுவார். இதுதான் பல படங்களில் ரஜினி ஏற்ற டபுள் ரோல் கேரக்டர்களாக இருந்தது.

ஆனால் நாயகனாக நடித்த பிறகு அவர் பெரும்பாலும் சிங்கிள் ஹீரோவாக நடித்தார். பிறகு சில படங்களில் அப்பா போன்ற கௌரவமான சில காட்சிகளில் அவர் தோன்றி மறைவார். உதாரணமாக அருணாசலம் முத்து போன்ற படங்களை சொல்லலாம். ஆனால் நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தில் ரஜினி மீண்டும் வில்லன் ரோலில் சிட்டி கேரக்டரில் நடித்திருந்தார்.

- Advertisement -

அந்த ரோலில் நடித்த பிறகு ரஜினிக்கு மீண்டும் வில்லன் கேரக்டர் மீது அதிக ஆசை ஏற்பட்டுள்ளது. கபாலி காலா பேட்ட படங்களிலும் வில்லத்தனமாக ஒரு கதாநாயகனாக கேங்ஸ்டர் கதையில் ரஜினி விரும்பி நடித்திருந்தார். இப்போது கூலி படத்திலும் கூட ரஜினிக்கு நெகட்டிவ் ரோல்தான் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. வில்லன் போன்ற ரோலில் ரஜினி நடித்திருக்கிறார் என்றே சொல்லப்படுகிறது.

இப்போது தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம், வில்லன் ஹீரோ என 2 கேரக்டர்களில் வருவது போன்ற கதைகளை ரெடி செய்யுங்கள். அதற்கேற்ப ஸ்கிரிப்ட் எழுதுங்கள் என்று கூறியிருக்கிறார். ஒரே மாதிரியான கேரக்டர்களில், நான் நல்லவனாக எவ்வளவு நாள்தான் நடிப்பது என்ற டயலாக் பாணியில் தான், ரஜினிகாந்த் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்