- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல நடிகைக்கு போன் செய்து, என் படத்துல நீங்க நடிக்க வேண்டாம் என்று சொன்ன சூப்பர்...

பிரபல நடிகைக்கு போன் செய்து, என் படத்துல நீங்க நடிக்க வேண்டாம் என்று சொன்ன சூப்பர் ஸ்டார் – உண்மையை போட்டுடைத்த டைரக்டர் கேஎஸ் ரவிக்குமார்

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த், துவக்கத்தில் இயக்குனர்களின் நடிகராக இருந்தார். அவர்கள் சொல்கிற கேரக்டர்களில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, பாராட்டை பெறுபவராக இருந்தவர். அதனால் பழைய படங்கள் சிலவற்றில், ரஜினி பெரும்பாலும் கேரக்டராகவே வாழ்ந்திருப்பதை காண முடியும்.

ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு, ரஜினிகாந்த் இமாலய வளர்ச்சிக்கு வந்த பிறகு ரஜினிக்கான கதைகளை உருவாக்க இயக்குனர்கள் முன்வந்தனர். ரஜினிகாந்த் இப்படி நடித்தால்தான் நன்றாக இருக்கும், அவரது ரசிகர்களுக்கு பிடிக்கும் என்ற மனநிலைக்கு மாறிவிட்டனர். அதனால் பாட்ஷா படத்துக்கு பிறகு ஹீரோயிசம் சார்ந்த படங்களே ரஜினி படங்களாக இதுவரை இருந்து வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் கேஎஸ் ரவிக்குமார், சுரேஷ் கிருஷ்ணா, பா ரஞ்சித், ஷங்கர் போன்ற சில இயக்குனர்கள் மட்டும் கொஞ்சம் மாறுபட்டு, கதைக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் ரஜினியை நடிக்க வைக்க முயற்சித்துள்ளனர். எனினும் அந்த படத்திலும் ஏ டூ இசட் வரை தீர்மானிக்கும் ஒரு இடத்தில் நடிகர் ரஜினிகாந்த் தான் இருக்கிறார்.

தன்னுடைய படத்தில் யார், யார் நடிக்க வேண்டும், யார் இசையமைக்க வேண்டும், எப்படிப்பட்ட பாடல்கள் இருக்க வேண்டும் என்று இறுதிக்கட்ட முடிவை எடுப்பவர் ரஜினியாக தான் இருக்கிறார். படையப்பா படத்தில் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ரூ. 1 கோடி சம்பளம் கொடுக்க சொன்னதும் நடிகர் ரஜினிகாந்த் தான். ரூ. 20 லட்சம் சம்பளம் வாங்கும் சிவாஜியே ஒரு கோடி ரூபாய் செக் பார்த்து அசந்து போயிருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில், நடிகரும் இயக்குனருமான கே எஸ் ரவிக்குமார், முத்து படம் குறித்து ஒரு நேர்காணலில் பேசிய போது கூறியதாவது, முத்து படத்தில், நடிகர் சரத்பாபுவுக்கு ஜோடியாக, அதாவது அவரது மாமா மகள் கேரக்டரில் முதலில் நடிகை ஊர்வசியை தான் நான் கமிட் செய்திருந்தேன். வெள்ளந்தியான அந்த கேரக்டருக்கு அவர் சரியாக இருப்பார் என்று கருதினேன். ஆனால் இதை அறிந்தவுடன் ரஜினிகாந்த் உடனடியாக மறுத்துவிட்டார்.

ஊர்வசி மிகச்சிறந்த நடிகை. நல்ல நடிப்பாற்றல் மிக்க நடிகை. இந்த கேரக்டரில் அவர் நடிப்பதற்கான வாய்ப்பே இல்லை. அதனால் ஊர்வசி வேண்டாம் என மறுத்துவிட்டார். அதுமட்டுமின்றி ஊர்வசிக்கு போன் செய்து, உங்களை போன்ற நல்ல ஆர்ட்டிஸ்ட், இதுபோன்ற கேரக்டரில் நடிப்பது சரியாக வராது. அதனால் வேண்டாம் என்கிறேன், என்றும் தன்மையாக கூறியிருக்கிறார். ஊர்வசியும் அதை புரிந்துக்கொண்டு ஓகே சொல்லி, அந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என்று கே எஸ் ரவிக்குமார் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்