நாளை மறுதினம் 14ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஆர்வமும் இருந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் அனிருத் இசையில் ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த படம் நிச்சயமாக பிளாக்பஸ்டர் மூவியாக இருக்கும் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக படத்தைக் காண காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது பலருக்கும் முகச் சுளிப்பையும் அவர் மீது ஒரு அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் அவருடன் இந்த படத்தில் நடித்த சக நடிகர் நடிகைகள் குறித்து அவர்களது உடல் தோற்றம் குறித்து மேடையில் பேசியது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.
குறிப்பாக மலையாள நடிகர் செளபின் சாஹர் பற்றி பேசும்போது, முதலில் இவரை பார்த்தபோது என்ன சொட்டை தலையுடன் இருக்கிறார்? இவர் சரியாக இருப்பாரா என்றெல்லாம் நினைத்தேன் என்று கூறி சௌபின் சாஹிரை அசிங்கப்படுத்தினார். அடுத்ததாக நடிகை ஸ்ருதிஹாசன் பற்றி பேசும்போது ஸ்ருதி மிகவும் கவர்ச்சியான நடிகை, கிளாமர் ஆர்டிஸ்ட் என்று சொல்லி அவரையும் ஒரு விதத்தில் இன்சல்ட் செய்தார். இதற்கும் அவர் நடிகர் கமல்ஹாசனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இசையமைப்பாளர் அனிருத் பற்றி கூறும் பேசும்போது, அனிருத் நடத்தும் இசைக்கச்சேரிகளுக்கு பாட்டு கேட்க சிலர் வருகிறார்கள். அதைவிட அனிருத்தை பார்க்க தான் பெண்கள் அதிகமாக வருகிறார்கள். அனிருத்தை பார்க்க வரும் பெண்களை பார்க்க நிறைய ஆண்களும் வருகிறார்கள். அந்த இருட்டுக்குள் ஆண்களும் பெண்களும் ஒன்றாக இருப்பதை நினைத்துப் பாருங்கள் என்று கூறியது பலரையும் அதிர்ச்சியடைய செய்தது.
மேலும் கூலி படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்துள்ள நிலையில் அவரைப் பற்றி ரஜினி பேசும்போது, பாலிவுட்டில் ஒரு பக்கம் ஷாருக்கான் இன்னொரு பக்கம் சல்மான்கான் நடுவில் குள்ளமாக அமீர்கான் என்று கூறி அவரையும் ஒரு விதத்தில் உருவத்தோற்றத்தை கேலி செய்யும் விதமாக ரஜினிகாந்த் பேசியிருந்தார்.
இந்த விழாவில் சுவாரஸ்யமாக பேச நிறைய விஷயங்கள் இருக்கும்போது ரஜினிகாந்த் இப்படிதான் பேச வேண்டுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ரஜினி சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு கூலியாக மூட்டை தூக்கிய கதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் இப்போது யார் கேட்டார்கள்? வாழ்க்கையில் ஒருவர் அடிமட்ட நிலையில் இருக்கும் எல்லோருமே எல்லா கஷ்டங்களையும் அனுபவித்துதான் முன்னுக்கு வருவார்கள். இதையெல்லாம் ரஜினிகாந்த் மேடையில் சொல்லி ஒரு ஸிம்ப்பதி சீன் கிரியேட் பண்ணவும் வேண்டுமா என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.





