- Advertisement -
Homeபொழுதுபோக்கு23 ஆண்டுகளுக்கு பிறகு ரி ரிலீஸ் செய்யப்படும் மாதவன் படம் - இது வேற லெவல்...

23 ஆண்டுகளுக்கு பிறகு ரி ரிலீஸ் செய்யப்படும் மாதவன் படம் – இது வேற லெவல் லவ் கான்செப்ட் படமாச்சே என ஆச்சரியப்படும் ரசிகர்கள்!

- Advertisement -

பொதுவாகவே தமிழ் சினிமாவில் காதல் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கமல் அஜீத்குமார் விஜய் நடித்த பல காதல் படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன. குறிப்பாக விஜய்க்கு பூவே உனக்காக காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் அவரது சினிமா பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது.

அதே போல் நடிகர் அஜீத்குமாருக்கு காதல் கோட்டை காதல் மன்னன் அமர்க்களம் போன்ற படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றுத் தந்த படங்களாக இருந்தன. அதே போல் நடிகர் கமல்ஹாசனுக்கு 1980 90களில் காதல் இளவரசன் என்ற பட்டப் பெயரே இருந்தது. அவர் ஆரம்பத்தில் நிறைய காதல் படங்களில் நடித்திருந்தார்.

- Advertisement -

குறிப்பாக நடிகர் மாதவன் ஆரம்பத்தில் நிறைய காதல் படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக ஜே ஜே பிரியகி எதிரி என்னவளே வாழ்த்துகள் மன்மதன் அம்பு மின்னலே பார்த்தாலே பரவசம் குரு என் ஆளு பிரியசகி ரெண்டு உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்திருந்தார். இதில் பல காதல் படங்களாக இருந்தன.

அதே போல் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். அவரும் தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் பெரிய இடம் பிடித்தார். குறிப்பாக மெர்க்குரிப் பூக்கள் புதிய கீதை ஆயுத எழுத்து மம்பட்டியான் மரியாதை திருமகன் என பல படங்களில் மீரா ஜாஸ்மின் நடித்திருக்கிறார்.

- Advertisement -

இப்போதும் தமிழ் சினிமாவில் வெளியாகும் காதல் படங்கள் பெரிய அளவில் வரவேற்பும் வெற்றியும் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் கடந்த 2002ம் ஆண்டில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான படம் ரன். மாதவன் மீரா ஜாஸ்மின் இணைந்து நடித்து வெளியான இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

குறிப்பாக வித்யாசாகர் இசையில் உருவான பாடல்கள் எல்லாம் சென்சேஷனல் பாடல்களாக இருந்தன. ஆக்சன் படங்களுக்கு ஒரு ட்ரெண்ட் செட்டர் படமாகவும் ரன் படம் இருந்தது. தற்போது இந்த படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் 23 ஆண்டுகளுக்கு பிறகு ரன் திரைப்படம் விரைவில் புதிய தொழில்நுட்பத்துடன் புதுப்பொலிவுடன் தமிழ்நாடு கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்