- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் ராசாவின் மனசிலே ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த அந்த சம்பவம் - பல ஆண்டுகளுக்கு பின்...

என் ராசாவின் மனசிலே ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த அந்த சம்பவம் – பல ஆண்டுகளுக்கு பின் நடிகை மீனா குறித்து பேசிய நடிகர் ராஜ்கிரண்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சினிமா தயாரிப்பாளராக இருந்தவர் ராஜ்கிரண். சினிமாவில் நடிப்பதற்கு முன்பு அவரது பெயர் காதர் மொய்தீன் பாய். சினிமாவில் நடிகரான பிறகுதான் தனது பெயரை ராஜ்கிரண் என மாற்றிக்கொண்டார். பல படங்களை தயாரித்த ராஜ்கிரண், கதாநாயகனாக நடித்து அறிமுகமான படம் என் ராசாவின் மனசிலே.

இந்த படத்தை டைரக்ட் செய்தவர் இயக்குனர் கஸ்தூரி ராஜா. இந்த படம் கடந்த 1991ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் நடிகை மீனா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில்தான் நடிகர் வடிவேலு காமெடி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.

- Advertisement -

மாயாண்டி என்ற கேரக்டரில் நடிகர் ராஜ்கிரணும் அவரது மனைவியாக சோலையம்மா என்ற கேரக்டரில் மீனாவும் நடித்திருந்தனர். இந்த படத்தில் இசைஞானி இசையில் வெளியான அனைத்து பாடல்களும் சக்கைப் போடு போட்டது. இதில் சண்டை காட்சிகளும் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தன. கவுண்டமணி செந்தில் காமெடி படத்துக்கு நல்ல பக்கபலமாக இருந்தது.

இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு நடிகர் ராஜ்கிரண் தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்தார். அதே போல் நடிகை மீனாவுக்கும் ரஜினி கமல் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு அர்ஜூன் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு அமைந்தது. அதே போல் நடிகர் வடிவேலுவும் சிங்கார வேலன் தேவர்மகன் காதலன் என பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

- Advertisement -

சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற நடிகர் ராஜ்கிரண் என் ராசாவின் மனசிலே படம் குறித்து பேசியதாவது, அந்த காலகட்டத்தில் இப்போ மாதிரி எல்லாம் கேரவன் வசதி எல்லாம் கிடையாது. கேரவனே அப்போ கிடையாது. ஒரே நாளில் ஒரு பாட்டு ஷூட்டிங் நடத்தினோம். ஒரு அஞ்சாறு லொகேஷன் ஷிப்ட் பண்ணி பண்ணி ஷூட் பண்ணினோம்.

அஞ்சாறு முறை டிரஸ் சேஞ்ச் பண்ணனும். அந்த ரோட்டுல ஓரமா காரை நிறுத்திட்டு காருக்கு பின்னாடி டிரஸ் சேஞ்ச் பண்ணீட்டு மீனா ஓடி வருவாங்க. அதை இன்னிக்கு எல்லாம் நெனைச்சு பார்த்தா சாத்தியமே இல்லை. இவ்வளவுக்கும் காரணம் அவங்க அம்மா அவருக்கு ஊக்கம் கொடுத்ததுதான். அவர் கொடுத்த உற்சாகம்தான் காரணம் என்று நடிகர் ராஜ்கிரண் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்