- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக வெற்றிக்கழகம் செய்த தரமான சம்பவம், ஆட்சிக்கு வந்த கட்சிகள் கூட இதை செய்யலையே? -...

தமிழக வெற்றிக்கழகம் செய்த தரமான சம்பவம், ஆட்சிக்கு வந்த கட்சிகள் கூட இதை செய்யலையே? – 2026 சட்டசபை தேர்தலில் தளபதி வேற லெவல் தாம்பா!

- Advertisement -

நடிகர் விஜய், இப்போது நடித்து வரும் படம் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இந்த படத்தின் ஷூட்டிங்கை வரும் 31ம் தேதிக்குள் நிறைவு செய்யும் விஜய், அடுத்த மாதம் தமிழக வெற்றிக்கழகம் ( டிவிகே) கட்சியின் முதல் மாநில மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளார். விஜயகாந்த், கமலை தொடர்ந்து விஜயும் கட்சி முதல் மாநாட்டுக்கு மதுரையையே தேர்வு செய்திருக்கிறார்.

பொதுவாக மார்க்கெட் இழந்த நடிகர், நடிகையர்தான் இனி நடிப்பின் மூலம் கல்லா கட்ட முடியாத நிலையில், அரசியலுக்கு வருவார்கள். எம்பி, எம்எல்ஏ வாய்ப்பு கிடைத்தால், அதை வைத்து 5 ஆண்டுகளையோ, 10 ஆண்டுகளையோ ஓட்டி விடலாம் என்று நினைப்பார்கள். ஆனால் விஜய், நெம்பர் 1 நிலையில் இருக்கும்போதே அரசியலுக்குள் வந்துவிட்டார்.

- Advertisement -

இதற்கு காரணம், நடிகர் விஜயின் ஒரே நோக்கம் தமிழக முதல்வர் ஆக வேண்டும் என்பதுதான். பல ஆண்டுகளாக அழைத்தும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை. நடிகராக புகழ் பெற்ற கமல்ஹாசனால், அரசியல்வாதியாக மக்களிடம் ஆதரவை பெற முடியவில்லை. ஸ்டாலின் ஆட்சியிலும் மக்கள் அதிருப்தியடைந்த நிலையில், விஜய் களத்தில் குதித்திருக்கிறார்.

அதிமுக திமுக தரப்பின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி, மற்ற கட்சிகள் கூட்டணியில் அந்த கட்சிகளின் தவறுகளுக்கு துணை போகும் நிலையில், தனித்து நின்று மக்களின் செல்வாக்கை பெறும் நோக்கத்தில், விஜய் தேர்தலை சந்திக்கிறார். திமுக, அதிமுக கட்சிகளில் மோசமான ஆட்சிகளை 5 ஆண்டுகளும் விமர்சிக்கும் அதே கட்சிகள், தேர்தல் நேரத்தில் அவர்களுடன் சென்று ஒட்டிக்கொள்வது ஓட்டு அரசியல் என்பதை மக்கள் தெளிவாக புரிந்துவிட்டனர்.

- Advertisement -

இன்னும் அரசியல் களத்தில் முழுமையாக குதிக்காத நிலையில், கட்சி கொள்கைளை அறிவிக்காத நிலையில் இப்போதே தனது மக்கள் திட்ட பணிகளை துவங்கி விட்டார் நடிகரும் டிவிகே தலைவருமான விஜய். சென்னையை அடுத்துள்ள கும்மிடிப்பூண்டியில் வீடு இல்லாத ஏழை மக்களில் 7 பேருக்கு 7 வீடுகள் கட்டித் தந்துள்ளார். அந்த புது வீடுகளை டிவிகே கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் சமீபத்தில் திறந்து வைத்துள்ளார்.

நடிகர் விஜயின் இந்த செயல், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்களுக்கான முதல்வரை போல, எடுத்தவுடனே வீடு இல்லாத மக்களில் 7 பேருக்கு வீடு கட்டித் தர விஜய் முன்வந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல. நிச்சயமாக அவர் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு பலவிதமான நன்மைகளை உண்மையாக செய்வார் என்பதையே இது காட்டுகிறது. விஜய் மக்கள் நலனில் அக்கறை கொண்டுதான் அரசியலுக்கு வருகிறார் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்