- Advertisement -
Homeபொழுதுபோக்குஉன் நல்லதுக்குதான் சொல்றேன், பெட்டி கடை வச்சி பிழைச்சிக்கோ-ஜெய் பீம் மணிகண்டனை மிரட்டிய நடிகர் ரமேஷ்...

உன் நல்லதுக்குதான் சொல்றேன், பெட்டி கடை வச்சி பிழைச்சிக்கோ-ஜெய் பீம் மணிகண்டனை மிரட்டிய நடிகர் ரமேஷ் திலக்! ஆனால் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை

- Advertisement -

“ஜெய் பீம்” திரைப்படத்தில் ராஜாகண்ணு என்ற கதாப்பாத்திரத்தில் மிக யதார்த்தமாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் மணிகண்டன். இவர் “ஜெய் பீம்” திரைப்படத்திற்கு முன்பே “காதலும் கடந்து போகும்”, “எட்டு தோட்டாக்கள்”, “காலா”, “சில்லு கருப்பட்டி”, “ஏலே” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Manikandan

“ஜெய் பீம்” திரைப்படத்திற்கு பிறகு “சில நேரங்களில் சில மனிதர்கள்” என்ற திரைப்படத்தில் நடித்த மணிகண்டன், சமீபத்தில் வெளிவந்த “குட் நைட்” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

- Advertisement -

மணிகண்டன், மிகச் சிறந்த நடிகர் மட்டுமல்லாது அவர் மிக சிறந்த வசனக்கர்த்தாவும் கூட. “பீட்சா 2”, “விக்ரம் வேதா”, “விஸ்வாசம்”, “தம்பி”, “சில நேரங்களில் சில மனிதர்கள்” போன்ற திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதியுள்ளார். மேலும் இவர் சிறந்த மிமிக்ரி கலைஞரும் ஆவார். குறிப்பாக இவர் டெல்லி கணேஷின் குரல் போன்று மிமிக்ரி செய்வது பலரையும் ரசிக்கவைக்கும் ஒன்று.

இதனை தொடர்ந்து “குட் நைட்” திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த மணிகண்டனும் அத்திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த ரமேஷ் திலக்கும் ஒரு பேட்டியில் கலந்துகொண்டனர். ரமேஷ் திலக், மணிகண்டன் ஆகியோர் பல வருடங்களாக நெருங்கிய நண்பர்களாக திகழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் அப்பேட்டியில் நிருபர் மணிகண்டனிடம், ரமேஷ் திலக் குறித்து சில விஷயங்கள் கூறுமாறு கேட்டார்.

- Advertisement -

அதற்கு மிகவும் ஜாலியாக பதிலளித்த மணிகண்டன், “ரமேஷ் திலக் பாஸிட்டிவான ஆள். எதாவது படத்தில் நான் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்தால் கூட முதல் ஆளாக எனக்கு ஃபோன் செய்பவர் ரமேஷ் திலக்தான். ‘படம் பார்த்தேன் நல்லா நடிச்சிருக்க’ என்று அவர் என்னை பாராட்ட முடியும். ஆனால் அவர் அப்படி பாராட்ட மாட்டார்.

ஜெய் பீம் படம் வெளிவந்தபோது ரமேஷ் திலக் நெஞ்சுக்கு நீதி படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். அப்போது எனக்கு ஃபோன் செய்த ரமேஷ் திலக், ‘ஏய், என்ன ஏதோ படம் பண்ணிருக்கியாம். உன்ன பத்திதான் ஏரியால பேச்சா இருக்கு. இங்க பாரு, உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். நான் சென்னைக்கு வரும்போது ஒழுங்கா நீ எதாவது பெட்டி கடை வச்சி செட்டில் ஆகிடனும். இனி ஷூட்டிங்ல எங்கயாவது உன்னைய பார்த்தேன்’ என்று கூறுவார். இது அவரது லவ் லாங்குவேஜ். இப்படி பேசித்தான் நம்மை அவர் ஊக்குவிப்பார்” என மிகவும் கலகலப்பாக கூறினார்.

- Advertisement -

சற்று முன்