- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்கள் உண்மையான தமிழன் தானா, இல்லே அத்தனையும் நடிப்பா, அவர்கிட்ட பழகியதும் நடிப்புத்தானா? - ரஜினியை...

நீங்கள் உண்மையான தமிழன் தானா, இல்லே அத்தனையும் நடிப்பா, அவர்கிட்ட பழகியதும் நடிப்புத்தானா? – ரஜினியை வெளுத்து வாங்கிய பிரபலம்

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது தசெ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்போது ஆந்திராவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. வரும் மார்ச் இறுதிக்குள் இந்த படம் ஷூட்டிங் முடிவடையும் நிலையில், ஏப்ரல் முதல் வாரத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி 171 படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்தை முடித்த பிறகு அடுத்ததாக ரஜினி 172 படமாக நெல்சன் இயக்கத்தில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படமாக இருக்கலாம். அல்லது மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் படமாகவும் அது இருக்கலாம். ஆனால் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் ரஜினியின் சம்பளம் ரூ. 210 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில், ரஜினிகாந்த் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறார். சமீபத்தில் இசைஞானி இளையராஜா மகள் பவதாரணி கல்லீரல் புற்றுநோயால், இலங்கையில் உயிரிழந்தார். அவரது உடல் இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்டது. இளையராஜா வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. இளையராஜாவுக்கு ரஜினி நேரில் சென்று ஆறுதல் சொல்லி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது, ஒரு வீட்டில் ஒரு துக்க சம்பவம் நிகழ்ந்து விட்டால் 3 தெருக்காரர்கள், அந்த சடலம் எடுக்கும் வரை சாப்பிட மாட்டார்கள். துக்கம் அனுசரிப்பார்கள். இறந்தவர் வீட்டில் உள்ளவர்களுக்கு சமைத்து சாப்பிட கொடுப்பார்கள். அவர்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள். இதுதான் தமிழர்களின் பழக்கம். பண்பாடாக இருக்கிறது.

- Advertisement -

ஆனால் இளையராஜாவை சாமி, கடவுள் என்று கூறும் ரஜினிகாந்த், இளையராஜாவின் அன்பு மகள் இறந்து வீட்டில் உடல் வைக்கப்பட்டிருந்த அந்த சூழலில் லால் சலாம் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு சொற்பொழிவாற்றி இருக்கிறார். இசைஞானி வீட்டில் இப்படி ஒரு துயரம் நடந்திருக்கும்போது ரஜினி இந்த விழாவை ஒத்தி வைத்திருக்க வேண்டும். அல்லது கலந்துக்கொண்டிருக்க கூடாது.

ஆனால் அவர் இப்படி செய்தது, உண்மையிலேயே அவர் தமிழர் தானா, இல்லை தமிழர் என்று சும்மா சொல்லிக்கொண்டு இருக்கிறாரா, சினிமா போல எல்லாமே நடிப்பா, இளையராஜாவிடம் பழகியது எல்லாமே நடிப்பா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. ரஜினியின் இந்த பண்பற்ற செயலை, நான் வன்மையாக கண்டிக்கிறேன், என அந்த வீடியோவில் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்