- Advertisement -
Homeபொழுதுபோக்குபொங்கல் ரேஸில் இருந்து விலகிய விடாமுயற்சி, உடனடியாக களத்தில் இறங்கிய 2 படங்கள் - இந்த...

பொங்கல் ரேஸில் இருந்து விலகிய விடாமுயற்சி, உடனடியாக களத்தில் இறங்கிய 2 படங்கள் – இந்த முறை அவங்க 2 பேரும் மோதப் போறாங்களா?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் உருவான படம் விடாமுயற்சி. கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் அஜர்பைஜானில் படப்பிடிப்பை துவங்கியது. பல மாதங்களாக ஜவ்வாக இழுத்த இந்த படத்தின் ஷூட்டிங் ஒரு வழியாக நிறைவடைந்து விட்டதாக டிசம்பர் மாதம் தகவல் வெளியானது. அஜீத், திரிஷா பாடல்காட்சி ஒன்று மட்டுமே மீதமுள்ளதாக கூறப்பட்டது.

அந்த பாடலுக்கான படப்பிடிப்பும் டிசம்பர் கடைசி வாரத்தில் வெளிநாட்டில் நடந்ததாக புகைப்படங்கள் வெளியானது. எப்படியும் விடாமுயற்சி பொங்கலுக்கு வௌியாகும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, நேற்றிரவு அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடக்சன்ஸ் அதிரடியான அறிக்கை வெளியிட்டு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

- Advertisement -

தவிர்க்க முடியாத காரணங்களால் விடாமுயற்சி படம் பொங்கல் வெளியீடு தள்ளி போடப்பட்டுள்ளது என்ற தகவலை உறுதிப்படுத்தி விட்டது. மீண்டும் எப்போது ரிலீஸ் என்ற தகவலும் அதில் இல்லாததால், இந்த படத்தை வெளியிடுவார்களா, மாட்டார்களா என்பதே பெரிய சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

ஏனெனில் பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் கதையை அப்பட்டமாக காப்பியடித்துதான் விடாமுயற்சி படத்தை எடுத்துள்ளனர். அதற்கான அனுமதியும் வாங்கவில்லை. இதற்காக ஆரம்பத்தில் ரூ. 150 கோடி நஷ்டஈடு கேட்ட ஹாலிவுட் பட நிறுவனம், கடைசியில் ரூ. 30 கோடிக்கு சம்மதித்தது. ஆனால் அதையும் லைகா நிறுவனம் கடைசி வரை தரவில்லை.

- Advertisement -

விடாமுயற்சி படம் திரைக்கு வராது என்பது உறுதியானதால், விக்ரம் நடித்த வீரதீர சூரன் படம் பொங்கலுக்கு வர அதிக வாய்ப்புள்ளது. பண்ணையாரும் பத்மினியும் சித்தா படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் இயக்கிய வீரதீர சூரன் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. விடாமுயற்சி படம் காரணமாகவே, இந்த படம் ரிலீஸை ஜனவரி 24 தள்ளி வைத்த நிலையில், விடாமுயற்சி வராததால் இந்த படம் வெளியாகும்.

அதே போல் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யாமேனன் நடிப்பில் உருவான காதலிக்க நேரமில்லை படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. பாலா இயக்கிய வணங்கான் படம் ரிலீஸாக உள்ளதால் இயக்குனர் பாலா, அவரது முதல்படம் சேது நாயகன் சியான் விக்ரம் பொங்கல் களத்தில் நேரடியாக மோதுகின்றனர். ஷங்கரின் கேம் சேஞ்சர் படமும் பொங்கல் களத்தில் குதிக்கிறது.

- Advertisement -

சற்று முன்