- Advertisement -
Homeபொழுதுபோக்குஇதுதான் அரசியல் நாகரீகமா? அதெல்லாம் மறந்து போய்விட்டதா? - நடிகர் விஜய் குறித்து பேசிய நடிகர்...

இதுதான் அரசியல் நாகரீகமா? அதெல்லாம் மறந்து போய்விட்டதா? – நடிகர் விஜய் குறித்து பேசிய நடிகர் ரஞ்சித்!

- Advertisement -

தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று கோவையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஞ்சித் கலந்துக்கொண்டார். அப்போது அவர் நடிகர் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அந்த விழாவில் நடிகர் ரஞ்சித் பேசியதாவது, மோடிஜி என்று கையை சொடக்கு போட்டு கைநீட்டி மதுரை தவெக மாநாட்டில் நடிகர் விஜய் பேசியிருக்கிறார். கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி அன்னிக்கு தேர்தல் பிரசாரத்தின் போது கொடீசியா வளாகத்தில் பூனைக்குட்டி மாதிரி கையை கட்டிக்கிட்டு பம்முன்னு உட்கார்ந்திருந்தியே தம்பி?

- Advertisement -

இப்போ அவர் கேட்கறார். இஸ்லாமிய சகோதரர்களுக்கும், இஸ்லாமிய மக்களுக்கும் துரோகம் இழைக்க வந்தததா ஒன்றிய அரசு என்று கேட்கிறாயே தம்பி? அன்னிக்கு நீ என்ன கோரிக்கையை வெச்சே? கச்சத் தீவை மீட்கறதுக்கு வந்து பார்த்தியா? மீனவர் நலனுக்காக பார்த்தியா? இல்லே கல்வி சமத்துவமா இருக்கணும் என்பதற்காக பார்த்தியா?

இல்லே கள்ளச்சாராயம் அதிகமா போயிடுச்சுன்னு தடுக்கறதுக்காக பார்த்தியா? எதுக்கு வந்து பார்த்தே? தலைவா உன் படம் ரீலீஸ் ஆகணும். நீ நடிச்ச தலைவா என்ற படம் ரிலீஸ் ஆகணும். அதுக்காக வந்து பார்த்தே. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மாதிரி அதெல்லாம் தம்பி விஜய்க்கு மறந்து போயிடுச்சுன்னு நினைக்கிறேன். பிரெய்ன்ல பிரச்னை இருக்குதுன்னு நினைக்கிறேன்.

- Advertisement -

மிஸ்டர் மிஸ்டர் என்று கையை நொடிக்கும் போதெல்லாம் நான் ஒரு வாக்காளன். எனக்கு அப்பா யார் என்றால் மோடிதான். என்னை அவர்தான் காப்பாற்றினார். நீ ஒவ்வொரு முறையும் கையை நொடிக்கும் போதும் எனக்குள் ஒரு வெறி, வேதனை என்ன வந்தது என்றால் உலக பொருளாதாரத்தை தீர்மானிக்கிற அமெரிக்கா பொருளாதாரத்தை தீர்மானிக்கிற ஒரே தலைவர் மோடிதான்.

உலக நாடுகளே வியந்து பார்க்கிற ஒரே தலைவர் மோடிதான். ஏன் அறிவில்லே? முதல்வரை பார்த்து அங்கிள்ன்னு சொல்றே? மிஸ்டர் மோடின்னு சொடக்கு போட்டு கூப்பிடறே? இதுதான் அரசியல் நாகரீகமா? நீ இப்படி இருந்தா உன்னை நம்பி வந்திருக்கிற இந்த பிள்ளைகள் எல்லாம் எப்படி இருப்பாங்க? கண்ணுங்களா. எத்தனை லட்சம் பிள்ளைகள்? என்று நடிகர் ரஞ்சித் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்