- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட அதற்குள் 22 ஆண்டுகள் ஆகி விட்டதா? கடவுளுக்கு நன்றி தெரிவித்த நடிகர் ரவி மோகன்…...

அட அதற்குள் 22 ஆண்டுகள் ஆகி விட்டதா? கடவுளுக்கு நன்றி தெரிவித்த நடிகர் ரவி மோகன்… ஆனா இது நல்லா இல்லையே பாஸ்?

- Advertisement -

நடிகர் ரவி மோகன் பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்தவர். குறிப்பாக ஜெயம் சந்தோஷ் சுப்ரமணியம் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி தனி ஒருவன் பேராண்மை உனக்கும் எனக்கும் போன்ற அவரது பல படங்கள் மாஸ் ஹிட் படங்களாக இருந்தன. கடைசியாக அவரது நடிப்பில் பெரிய வரவேற்பை பெற்ற படம் கோமாளி.

கோமாளி படத்தை இயக்கியவர், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் லவ் டுடே டிராகன் என இப்போது பிஸியான நட்சத்திர நடிகராக மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கோமாளி படத்துக்கு பிறகு ரவி மோகன் நடித்த எந்த படமும் பெரிய வெற்றியை பெறவில்லை. தொடர்ந்து இதுவரை பிளாப் படங்களாகவே ரவி மோகன் தந்து வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக இறைவன் அகிலன் சைரன் 108 பிரதர் காதலிக்க நேரமில்லை என ரவி மோகனின் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தன. இப்போது பராசக்தி படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் கராத்தே பாபு ஜீனி படங்களில் நடிக்கும் அவர் யோகிபாபு நடிக்கும் ஒரு படத்தை அவரே டைரக்ட் செய்கிறார்.

அதுதவிர வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார். அவருடன் எஸ்ஜே சூர்யாவும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அதனால் ரவி மோகனின் அடுத்தடுத்த படங்கள் அவரது திரை பயணத்தில் பெரிய திருப்புமுனையை வெற்றியை கொடுக்கும் என்று ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

- Advertisement -

இந்நிலையில், நடிகர் ரவி மோகன் ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவை செய்திருக்கிறார். அதில் ஜெயம் படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆகும் நிலையில் கடவுளுக்கு நன்றி என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில், இந்த பதிவு குறித்து பலரும் எதிர்மறை கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஜெயம் படத்தில்தான் நீங்கள் அறிமுகமாகி ஜெயம் ரவி என்றே ரசிகர்களால் கொண்டாடப்பட்டீர்கள். ஆனால் தொடர்ந்து நான்கைந்து படங்கள் தோல்வி ஆனதால் ஜெயம் ரவி என்ற பெயரை ரவி மோகன் என்று சமீபத்தில் மாற்றிக் கொண்டீர்கள். இப்போது ஜெயம் படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆனதற்கு கடவுளுக்கு நன்றி கூறுகிறீர்கள். தனது பெயரிலேயே ஜெயம் வேண்டாம் என்று நீக்கியவர், தன்னை அறிமுகப்படுத்திய படத்தை மட்டும் பெருமையாக சொல்வது நியாயமா, இது சரியில்லையே என்று ரவி மோகனை விமர்சித்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்