- Advertisement -
Homeபொழுதுபோக்குகாதலர்களுக்கு வித்யாசமான அட்வைஸ் சொன்ன ரஜினி பட வில்லன், சொந்த வாழ்க்கையில் ரொம்பவும் நொந்து போய்விட்டாரா?...

காதலர்களுக்கு வித்யாசமான அட்வைஸ் சொன்ன ரஜினி பட வில்லன், சொந்த வாழ்க்கையில் ரொம்பவும் நொந்து போய்விட்டாரா? – கலாய்க்கும் ரசிகர்கள்

- Advertisement -

சில நடிகர்கள் ஒரு படத்தில் நடித்தாலும், அவர்களது முத்திரை நடிப்பை வெளிப்படுத்தி அவர் ஒரு சிறந்த கலைஞர் என்பதை நிரூபித்து விடுவார்கள். அந்த வகையில் இந்தி நடிகர் அனுராக் காஷ்யப் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்த போதே, தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இப்போது மகாராஜா படம் பார்த்த ரசிகர்கள், அவரது நடிப்பை கொண்டாட துவங்கி விட்டனர்.

அதே போல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தையும் ரசிகர்களால் மறக்க முடியாது. அதுவும் சிங்காரம் கேரக்டரில் நடித்த இந்தி வில்லன் நடிகர் நவாசுதீன் சித்திக்கை தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதுமே மறக்க முடியாது. சுள்ளான் சிங்காரம் என்று ரஜினி அழைப்பது அந்த படத்தின் கிளைமாக்ஸில் வேற லெவல் காட்சியாக இருக்கும்.

- Advertisement -

சினிமாவில் ஹீரோவாக, வில்லனாக வெற்றி பெறும் பல கலைஞர்கள், தங்களது சொந்த வாழ்க்கையில், ஏராளமான ஏமாற்றங்களை துரோகங்களை சந்திக்கின்றனர். குறிப்பாக குடும்ப வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்படும் மோசமான திருப்பங்களும், விரும்பத்தகாத சம்பவங்களும் அவர்களை நிலைகுலையச் செய்து விடுகின்றன. பல நல்ல கலைஞர்கள் அடையாளம் தெரியாமல் மறைந்து போக இதுவும் ஒரு முக்கிய காரணம்.

அந்த வகையில் வில்லன் நடிகர் நவாசுதீன் சித்திக், ஆலியா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் நவாசுதீன் தன்னை அடித்து துன்புறுத்தியதாக ஆலியாவும், தன்னிடம் பணம் பறிக்க முயற்சிப்பதாக ஆலியா மீது நவாசுதீனும் மாறி மாறி புகார் அளித்து பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

- Advertisement -

இப்படி இருவருக்கும் இடையே பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் இருவரும் இணைந்து விட்டதாக தெரிவித்தனர். நாங்கள் இருவரும் மனக்கசப்புகளை மறந்து ஒன்றாக இணைய காரணம், குழந்தைகளின் எதிர்காலம் கருதிதான் என்ற ஒரு தகவலையும் இருவரும் பதிவிட்டனர்.

இந்த சூழலில் பதிவை ஒன்றை செய்துள்ள வில்லன் நடிகர் நவாசுதீன் சித்திக், திருமணத்துக்கு பிறகு தம்பதிக்கு இடையே காதல் நின்றுவிடும். திருமணத்துக்கு பிறகு இருவருக்கும் இடையே நேசம் குறைய துவங்குகிறது. எதிர்பாராத விதமான நிறைய விஷயங்கள் நடக்கின்றன. எனவே நீங்கள் யாரையாவது காதலித்தாலோ, தொடர்ந்து காதலிக்க விரும்பினாலோ திருமணம் செய்து கொள்ளாதீர்கள் என்று கூறியிருக்கிறார். இதை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்