- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு கோரிக்கை வைத்த நடிகர் ரவி மோகன் - தனது முதல் நாயகன்...

நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு கோரிக்கை வைத்த நடிகர் ரவி மோகன் – தனது முதல் நாயகன் ‘கோமாளி’ சொல்றதை ‘டிராகன்’ கேட்பாரா?

- Advertisement -

கடந்த 2019ம் ஆண்டில் வெளியான படம் கோமாளி. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவான இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் டைரக்ட் செய்து இயக்குரனாக அறிமுகமானார். சமீபத்தில் பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்ட ஜெயம் ரவி இந்த படத்தில் நாயகனாக நடித்திருந்தார்.

கோமாளி படம் ஜெயம் ரவிக்கும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கும் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்துக்கு கிடைத்த அமோக வரவேற்பு மற்றும் ரசிகர்களின் ஆதரவால்தான் தனது அடுத்த படம் லவ் டுடே படத்தை இயக்கி, பிரதீப் ரங்கநாதனே நாயகனாகவும் நடித்தார். அந்த படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில் தற்போது ரிலீஸான டிராகன் படம், சூப்பர் ஹிட் படமாக அவருக்கு அமைந்துள்ளது.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகர் ரவி மோகன் கூறியதாவது, பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நான் நடிக்க வாய்ப்பு இருக்கு. ஆனால் அவர் படம் டைரக்ட் பண்ணுவாரா என்ற கேள்வியை அவரிடம்தான் கேட்க வேண்டும். அவர் எப்போது என்னை நடிக்க அழைத்தாலும் நான் ஓகே சொல்லி விடுவேன்.

அவர் நடிகர் ஆனது எனக்கு பெரிய சந்தோஷம். அதை நான் வரவேற்கிறேன். அவர் நடிப்பில் பெரிய ஹீரோ ஆகணும். அந்த ஆசை எனக்கு என்னிக்குமே இருக்குது. ஆனால் அவர் படம் டைரக்ட் செய்வதை விட்டுவிடக் கூடாது என்பதையும் நான் பலமுறை சொல்லி இருக்கிறேன்.

- Advertisement -

அவர் என்னை வைத்து படம் பண்ண வேண்டும் என்பது இல்லை. யார் கூட வேண்டுமானாலும் படம் பண்ணட்டும். அந்த மாதிரி நான் மிஸ் பண்ணிய மற்றொரு டைரக்டர் எஸ்ஜே சூர்யா. அவர் என்னதான் சூப்பரா ஆக்ட் பண்ணினாலும் அவரது டைரக்‌ஷன் எக்ஸ்ட்ரானரியாக இருக்கும்.

அவர்கிட்ட நான் பலமுறை கேட்டிருக்கிறேன். சார் நீங்க ஆர்ட்டிஸ்ட் ஆயிட்டதால் எங்களை வெச்சு படம் எடுக்க மாட்டீங்களா என்று கேட்டிருக்கிறேன். அவர் அதற்கு சிரிச்சுக்கிட்டே பண்ணலாம் பண்ணலாம் என்று சொல்லி இருக்கிறார். அவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று நடிகர் ரவி மோகன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்