- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்க்கு அரசியல், அஜீத்குமாருக்கு கார் ரேஸ்… உங்களுக்கு என்ன? கூலாக பதில் தந்த நடிகர் ரவி...

விஜய்க்கு அரசியல், அஜீத்குமாருக்கு கார் ரேஸ்… உங்களுக்கு என்ன? கூலாக பதில் தந்த நடிகர் ரவி மோகன் – என்ன பாஸ் இப்படி சொல்லிட்டீங்க?

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜீத்குமார். விஜய் இப்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். அஜீத்குமார் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விடாமுயற்சி அவரது 63வது படமாகவும், குட் பேட் அக்லி 64வது படமாகவும் இருக்கிறது. இருவருமே ஏராளமான ரசிகர்களை கொண்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருக்கின்றனர்.

ஆனால் நடிகர் விஜய் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி தனது அரசியல் பிரவேசத்தை பகிரங்கமாக அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்கிய அவர், தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார். கடந்த அக்டோபா் 27ம் தேதி கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை வெற்றிக்கரமாக நடத்திக் காட்டினார்.

இந்த சூழலில் எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற டைட்டில் வைக்கப்பட்ட படத்தில் விஜய் நடித்து வருகிறார். அதே போல் நடிகர் அஜீத்குமாரும் நடிப்பை காட்டிலும் சமீபகாலமாக ஸ்போர்ட்ஸில் அதிக ஆர்வம் காட்டுகிறார். பைக் ரேஸ் கார் ரேஸ் ரைபிள் சுடுதல் போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

ஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரவி. தனது பெயரை பிறகு ஜெயம் ரவி என மாற்றிக்கொண்டார். தமிழில் தொடர்ந்து தனி ஒருவன் பேராண்மை சந்தோஷ் சுப்ரமணியம் உனக்கும் எனக்கும் என பல வெற்றிப் படங்களை தந்த அவர், சமீபத்தில் தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டிருக்கிறார்.

ரவி மோகன் நடிப்பில் சமீபத்தில் வெளியான காதலிக்க நேரமில்லை படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. தொடர்ந்து அவரது படங்கள் ஏமாற்றங்களை தந்து வருகின்றன. மேலும் தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்தாண்டில் அறிவித்த ரவி மோகன், இப்போது அவர்களது விவாகரத்து வழக்கு விசாரணை குடும்ப நல கோர்ட்டில் நடந்து வருகிறது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற அவரிடம் நடிகர் விஜய் அரசியலுக்கு சென்று விட்டார். நடிகர் அஜீத்குமார் கார் ரேஸில் பிஸியாக இருக்கிறார். அடுத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, நான் இமயமலையில் செட்டிலாகி விடுவேன் என்று கூலான பதில் தந்து ரசிகர்களை திகைக்க வைத்திருக்கிறார் நடிகர் ரவி மோகன். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்