- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனி நான் ஜெயம் ரவி அல்ல … அஜீத்குமார், கமலை தொடர்ந்து இப்படி ஒரு அறிவிப்பா?...

இனி நான் ஜெயம் ரவி அல்ல … அஜீத்குமார், கமலை தொடர்ந்து இப்படி ஒரு அறிவிப்பா? அட இவரும் அரசியலுக்கு வருவார் போல தெரிகிறதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரிய வெற்றிப் படங்களை தரும் பிரபல நடிகர்களுக்கு ஒரு கட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் இருந்து பட்டப் பெயர் கிடைத்து விடுகிறது. ஆனால் இந்த பட்டப் பெயரை இயக்குனரோ, தயாரிப்பாளரோ தான் யோசித்து தங்களது படத்தின் டைட்டிலில் வைப்பார்கள். அது அப்படியே ரசிகர்கள் மத்தியில் பரவி நிலைத்து விடுகிறது.

ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு ஆசை நாயகன் தல அல்டிமேட் ஸ்டார் போன்ற பட்டங்கள் வேண்டாம். அஜீத்குமார் அல்லது ஏகே என அழைத்தால் போதும் என்று அஜீத் அறிக்கை வெளியிட்டார். கடந்த நவம்பர் மாதத்தில் நடிகர் கமலும், இனிமேல் என்னை உலக நாயகன் கலைஞானி பத்மஸ்ரீ என்றெல்லாம் அழைக்க வேண்டாம். கமல் அல்லது கமல்ஹாசன் என குறிப்பிடுங்கள் என அறிக்கை வெளியிட்டார்.

- Advertisement -

அந்த வரிசையில் இருப்போது நடிகர் ஜெயம் ரவியும் ஒரு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டு புதிய தகவல் ஒன்றை கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்த நாள் துவங்கி நான் ரவி அல்லது ரவி மோகன் என என்று அழைக்கப்பட விரும்புகிறேன்.

இந்த பெயர் என் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திரைத்துறை கனவுகளை முன் நோக்கி எடுத்துச் செல்லும். என் கனவு மற்றும் மதிப்புகளுடன் புதிய பயணத்தை தொடங்கும் என்னை இந்த பெயரிலேயே அனைவரும் அழைக்குமாறும் ஜெயம் ரவி என்ற பெயரில் இனிவரும் காலங்களில் அழைக்க வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

- Advertisement -

திரைத்துறை மீது நான் கொண்டுள்ள அளவற்ற அன்பின் காரணமாக ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளேன். எனக்கு ஆதரவளித்த சமூகத்திற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய என் ரசிகர் மன்றத்தை பிறருக்கு உதவும் வகையில் ரவி மோகன் ரசிகர்கள் அறக்கட்டளையாக மாற்றப்படுகிறது.

தமிழ் மக்கள் ஆசியுடன் என் ரசிகர்கள் ஊடகத்தினர் மற்றும் அனைவரையும் மேலே குறிப்பிட்டுள்ளது போன்று என்னை அழைக்குமாறும் புதிய துவக்கத்திற்கு தங்களது ஆதரவை வழங்குமாறும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் ரவிமோகன் கூறியிருக்கிறார். இவரும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வர திட்டமிட்டுள்ளாரா என சினிமா ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்