- Advertisement -
Homeபொழுதுபோக்குதேசிய விருது நாயகன் காந்தாரா பட ஹீரோ ரிஷப் ஷெட்டிக்கு இப்படி ஒரு வருத்தமா? -...

தேசிய விருது நாயகன் காந்தாரா பட ஹீரோ ரிஷப் ஷெட்டிக்கு இப்படி ஒரு வருத்தமா? – கன்னட படங்களுக்கு அப்படி ஒரு நிலை வரக் காரணம் என்ன?

- Advertisement -

சமீப காலமாக கன்னட படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக 2 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த காந்தாரா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. கன்னடத்தில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த படம், முதலில் கன்னடத்தில் வெளியாக ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி என பிறமொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு, படம் பிளாக் பஸ்டர் மூவியாக அமைந்தது. மொழி வேறுபாடு பாராமல், இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். 400 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்தது.

- Advertisement -

குறிப்பாக ரிஷப் ஷெட்டியின் யதார்த்தமான நடிப்பும், இறுதிகாட்சியில் அவரது அந்த பக்தி பரவசமூட்டும் வினோத சத்தமும், ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாது. அதிலும் நிலச் சுவான்தாரர் கொத்தடிமை தனத்தை சொல்லும் இந்த படத்தின் கதைக்களமும், திரைக்கதையும் நடிகர்களின் கதாபாத்திரங்களும் வேற லெவலில் இருந்தன.

காந்தாரா படத்தை டைரக்ட் செய்து, ஹீரோவாகவும் நடித்த ரிஷப் ஷெட்டியின் நடிப்பு தரமான சம்பவமாக இருந்தது. இந்நிலையில் நேற்று மத்திய அரசு காந்தாரா படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நடிகர் தேசிய விருது அறிவித்துள்ளது. இப்போது காந்தாரா 2ம் பாகம் படத்தை இயக்கி வருகிறார் நடிகர் ரிஷப் ஷெட்டி.

- Advertisement -

இந்நிலையில் ரிஷப் ஷெட்டி கூறியதாவது, எனக்கு தேசிய விருது கிடைத்ததை பெரிய கவுரவமாக உணர்கிறேன். காந்தாரா படத்தில் நான் என்னுடைய வேலையை செய்தேன். அதில் பணியாற்றிய அனைவருக்கும் இந்த விருது சொந்தமானது. எனது படத்தில் பணிசெய்த தொழில்நுட்ப குழு சார்பில், மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கன்னட படங்கள், பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்கின்றன. விருதுகள் பெறுகின்றன. ஆனால் எங்கள் படங்களை எந்த ஓடிடி நிறுவனங்களும் வாங்குவதில்லை. அதனால் யூடியூப்பில் பதிவிடும் அவலத்துக்கு தள்ளப்படுகிறோம். இனிமேல் இந்த மாதிரியான படங்களை எடுக்க முடியுமா எனத் தெரியவில்லை. இரண்டு படங்களை தயாரித்து வருகிறேன். திரைப்படங்கள் தான் எனக்கு எல்லாமே கொடுத்தது, என்று வருத்தமாக பேசியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி.

- Advertisement -

சற்று முன்