தமிழ் சினிமாவில் மிக பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர். இவர் துவக்கத்தில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர். சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்வதில் இவர் வல்லவர் என நிரூபித்தவர்.
குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் போல அட்சரம் பிசகாமல் மிகச் சிறப்பாக அவரைப் போலவே முக பாவனைகள் காட்டி மிக அற்புதமாக பேசுவார். தொடர்ந்து விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகச் சிறப்பாக தனது நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சி தொகுப்பாளராக விஜய் டிவியில் நடத்திய அது இது எது என்ற நிகழ்ச்சியிலும் அடிக்கடி ரோபோ சங்கர் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றார். அதன்பிறகு சினிமாவில் ரோபோ சங்கருக்கு சில சில காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி கிடைத்த வகையில் சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல அபிமானத்தையும் வரவேற்பையும் அங்கீகாரத்தையும் பெற்றார் ரோபோ சங்கர்.
இப்போது ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி ரோலில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு குண்டாக இருந்த ரோபோ சங்கர் மிகவும் ஒல்லியாக மாறிப்போனார். ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் அளவுக்கு, அவரது உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது.
ஆனால் படிப்படியாக மீண்டும் தன் உடல் நலத்தை தேற்றிக் கொண்டு இப்போது பழையபடி நல்ல ஆரோக்கியத்துடன் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார் ரோபோ சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிகர் கமல்ஹாசனின் வெகு தீவிரமான ரசிகர் என்பதால் மக்கள் நீதி மய்யம் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஒரு தொண்டராக அவ்வப்போது காணப்படுகிறார்.
சமீபத்தில் ரோபா சங்கர் மகள் இந்திரஜா திருமணம் நடந்தது. அந்த திருமணத்தை பல கோடிகள் செலவு செய்து மிகப் பிரமாண்டமாக நடத்தினார். அந்த திருமணத்தின் காட்சிகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகிபரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரு டிவி நிகழ்ச்சி நேர்காணலில் ரோபோ சங்கர் கலந்து கொண்டார். அப்போது எதற்காக இவ்வளவு செலவு செய்து மிக பிரமாண்டமாக உங்கள் மகள் திருமணத்தை நடத்தினீர்கள் என்று ஒரு கேள்வி வந்தது. அதற்கு பதில் அளித்த நடிகர் ரோபோ சங்கர், என்னுடைய திருமணம் மிக மிக எளிமையாக நடந்தது. பெண் வீட்டிலிருந்து சிலர் மட்டுமே வந்திருந்தார்கள். மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்த ஒரே ஆள் நான் மட்டும்தான். அந்த அளவுக்கு என் திருமணம் வெகு சாதாரணமாக சென்னை வடபழனியில் நடந்தது. அதனால் என் மகள் திருமணத்தையாவது மிகப் பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டு பிரமாண்டமாக இந்த திருமணத்தை நடத்தினேன் என்று கூறியிருக்கிறார்.





