- Advertisement -
Homeபொழுதுபோக்குவருத்தப்படாத வாலிபர் சங்கம் ஹீரோவாக நான் நடித்திருக்க வேண்டிய படம் - புலம்பித் தள்ளிய பிரபல...

வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஹீரோவாக நான் நடித்திருக்க வேண்டிய படம் – புலம்பித் தள்ளிய பிரபல இயக்குனரின் மகன்!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். இந்த படத்தில் நாயகியாக ஓவியா நடித்திருந்தார். தொடர்ந்து எதிர்நீச்சல் மனம் கொத்தி பறவை வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் காக்கிச்சட்டை வேலைக்காரன் போன்ற படங்களில் நடித்து சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக மாறினார்.

இதில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் சிவகார்த்திகேயனுக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதில் ஸ்ரீதிவ்யா நாயகியாக நடித்திருந்தார். மேலும் சூரி சத்யராஜ் ஸ்ரீரஞ்சனி மொட்டை ராஜேந்திரன் கண்ணன் போன்றவர்களும் சிறந்த நடிப்பை தந்திருந்தனர்.

நடிகர் சிவகார்த்திகேயனை போல நடிகர் சூரிக்கும் இந்த படம் மிகப்பெரிய ஒரு அடையாளத்தை வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. ஜாலியான காமெடியான காதல் ஜானரில் உருவான இந்த படம் இன்றும் ரசிகர்கள் விரும்பி கொண்டாடும் ஒரு படமாக இருக்கிறது.

அதே போல் நடிகர் விமல் நடித்த களவாணி படமும் மிகப்பெரிய ஒரு வெற்றிப் படமாகும். இந்த படத்தில் நாயகியாக ஓவியா இளவரசு சரண்யா பொன்வண்ணன் கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படமும் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட ஒரு சிறந்த படமாக இருந்தது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சக்தி கூறியதாவது, வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் களவாணி ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருக்க வேண்டியவன் நான்தான். அந்த படங்களில் நடிக்க எனக்குதான் முதலில் வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த நல்ல வாய்ப்புகளை எல்லாம் நான் மிஸ் செய்துவிட்டேன் என்று அவர் புலம்பியிருக்கிறார்.

நடிகர் சக்தி, பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் பி வாசுவின் மகன். இவர் பல படங்களில் நடித்த போதும் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடிக்க முடியவில்லை. மேலும் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற போது பல விமர்சனங்களை சந்தித்தவர். இப்போதும் சினிமா வாய்ப்பின்றி சக்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்