பிரபல பின்னணி பாடகி சுசித்ரா அடிக்கடி பாலியல் சார்ந்த புகார்களை சொல்லி சர்ச்சையை கிளப்பி விடுகிறார். தற்போது மும்பையில் வசித்து வரும் அவர், ஏற்கனவே நடிகர் விஷால் மீது பல புகார்களை கூறியுள்ளார். தற்போது விஷால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார். சமீபத்தில் மதகஜ ராஜா பட விழாவில் அவர் கலந்து கொண்டபோது பலவீனமாக கைகள் நடுங்கிய நிலையில் காணப்பட்டார். இந்த வீடியோ வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஒரு வீடியோவில் பாடகி சுசித்ரா பேசியிருப்பதாவது, விஷாலின் இந்த நிலைமையை பார்த்து பலரும் வருத்தப்பட்டு இருப்பீர்கள். நான் விஷால் குறித்து பல ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷயத்தை சொல்கிறேன். எனது முன்னாள் கணவர் கார்த்திக் குமாருடன் நான் வாழ்ந்து கொண்டிருந்த போதுதான் இந்த சம்பவம் நடந்தது.
அடிக்கடி கார்த்திக் குமார் ஏதாவது ஒரு காரணம் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து வெளியே ஓடி விடுவார். ஒருநாள் கார்த்திக் இல்லாத போது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. கதவை திறந்து பார்த்தால் விஷால் கையில் ஒயின் பாட்டலுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் போதையில் இருந்தார் என்பது அவரை பார்க்கும் போதே தெரிந்தது.
கார்த்திக் குமார் இல்லையா என்று விஷால் கேட்க, நான் இல்லை என்றேன். உடனே நான் உள்ளே வரலாமா என்று விஷால் கேட்டார். நான் நோ என்று சொல்லி விட்டேன். உடனே அவர் கையில் இருந்த ஒயின் பாட்டிலை என்னிடம் நீட்டி இதற்காகத்தான் வந்தேன் என்றார். கார்த்திக் குமார் இல்லாத நேரமாக பார்த்து, வீட்டுக்கு வந்து எனக்கு ஒயின் பாட்டிலை கொடுத்தார்.
நான் அதை வாங்காமல், கௌதம் மேனன் அலுவலகத்தில் தான் கார்த்திக் குமார் இருக்கிறார். அங்கே போய் கொடுங்கள் என்று சொல்லிவிட்டு கெட்ட வார்த்தையால் திட்டினேன். அது காதில் விழாதது போல், என்ன சொன்னீங்க என்றதும், இங்கே ஒரு பூனை அடிக்கடி இப்படித்தான் தொல்லை பண்ணும். நீங்க போங்க என்று சொல்லிவிட்டு கதவை சாத்தி விட்டேன்.
அன்று தவறான எண்ணத்துடன் மது பாட்டிலை பிடித்த கைகள்தான் இன்று நடுங்கியபடி காட்சி தருகிறது. இது எனக்கு சந்தோஷம்தான் என்று பாடகி சுசித்ரா அந்த வீடியோவில் கூறியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. எதிரியாக இருந்தாலும் நோய்வாய்ப்பட்டு ஒருவர் இருக்கும் போது அதை பார்த்து சந்தோஷப்படுவது குரூரமான மனநிலையின் வெளிப்பாடு என விஷால் ரசிகர்கள் சுசித்ராவை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.





