தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகள் படத்தில் நடிக்க கமிட் செய்யப்பட்டவுடன் கால்ஷீட் தேதி ஒதுக்கீடு செய்த பிறகு ஒரு குறிப்பிட்ட பெரிய தொகை தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அந்த நடிகர், நடிகைகளுக்கு வழங்கப்படுகிறது. இது நடைமுறையில் இருந்து வருகிறது. மீதியை படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர்கள் டப்பிங் பேசுவதற்குள் தந்துவிடுவதும் வழக்கம்.
நடிகர் சிம்பு நடித்த வல்லவன் மன்மதன் ஒஸ்தி போன்ற படங்களில் நடித்தவர் சந்தானம். விஜய் டிவியில் காமெடி ஷோவில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் சந்தானத்தை சினிமாவுக்குள் வரவழைத்தவர் நடிகர் சிம்பு தான். அதனால் சிம்பு மீது எப்போதுமே சந்தானம் தனிப்பட்ட மதிப்பு மரியாதை மதிப்பு வைத்துள்ளார்.
மேலும் அவர்களது காமெடி கூட்டணி பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. இதற்கிடையே காமெடி நடிகர் சந்தானம் ஹீரோவாக மாறினார். 8 ஆண்டுகளாக பல படங்களில் அவர் நாயகனாக நடித்து வருகிறார். இதற்கிடையே பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் சிம்பு எஸ்டிஆர் 49 படத்தில் நடிக்க கமிட் ஆனார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க இருந்தது.
எஸ்டிஆர் 49 படத்தில் நடிகர் சிம்புவுடன் முக்கியமான ரோலில் படம் முழுவதும் வரும் விதமாக நடிகர் சந்தானமும் நடிக்க கமிட் செய்யப்பட்டார். அப்போது அதற்காக ஒரு பெரும்தொகை அட்வான்ஸ் ஆக டான் பிக்சர்ஸ் தரப்பில் சந்தானத்துக்கு தரப்பட்டது. ஆனால் அந்த படம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் டிராப் ஆகிவிட்டது.
இப்போது அந்த படத்துக்காக கொடுக்கப்பட்ட அட்வான்ஸ்சை டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் நடிகர் சந்தானத்திடம் திருப்பி தருமாறு கேட்டுள்ளது. ஆனால் நடிகர் சிம்புவிடம் கொடுத்த அட்வான்ஸை அந்நிறுவனம் திருப்பி கேட்கவில்லை. ஏனென்றால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் சிம்பு நடிக்கும் படத்தை தயாரிக்கும் முடிவில் டான் பிக்சர்ஸ் நிறுவனம் உள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் சிம்புவிடம் சென்ற நிலையில், சிம்புவிடம் கொடுத்த அட்வான்ஸ் பணம் எல்லாம் செலவாகி விட்டது நண்பா என்று நடிகர் சந்தானம் கூலாக கூறியிருக்கிறார். மேலும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தில் நடிகர் சந்தானமும் முக்கியமான ரோலில் நடிப்பதால் அதில் கிடைக்கும் அட்வான்ஸ் பணத்தை வாங்கி தருவதாக டான் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் சந்தானம் கூறியதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.





