தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற புகழ்பெற்றவர் இயக்குனர் ஷங்கர். பல சூப்பர் ஹிட் படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்திருக்கிறார். ஆனால் கடைசியாக ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் பலத்த தோல்வியை சந்தித்தன. இப்போது வேள்பாரி என்ற வரலாற்று நாவலை படமாக இயக்கும் முயற்சிகளில் இயக்குனர் ஷங்கர் தீவிரம் காட்டி வருகிறார்.
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். நடிகர் கார்த்தியுடன் விருமன் என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மாவீரன் என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு நேசிப்பாயா என்ற படத்திலும் நடித்த அதிதி சங்கர் கவனிக்கப்படும் ஒரு நடிகையாக இருக்கிறார். இவர் எம்பிபிஎஸ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை பாடகி நடனக்கலைஞர் என் என பன்முக திறமை கொண்ட அதிதி ஷங்கர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் நடிக்க துவங்கியிருக்கிறார். விளம்பரப் படங்களில் அதிதி ஷங்கர் நிறைய நடிக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை அதிதி ஷங்கர் கூறியதாவது, சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அப்பாவை பார்த்து எனக்குள்ளும் சினிமா ஆசை துளிர்விட்டது.
என் பெற்றோரிடம் என் சினிமா ஆசையை சொன்னபோது அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். முதலில் படி என்று சொல்லிவிட்டார்கள். சரி என்று எனக்கு பிடித்த மருத்துவத்தை படித்தேன். எம்பிபிஎஸ் முடித்தவுடன் அப்பாவிடம் சென்றேன். சினிமாவில் என்னால் சாதிக்க முடியவில்லை என்றால் மீண்டும் மருத்துவம் பார்க்க வந்து விடுகிறேன் என்றேன். அவர் சரி என்று சம்மதம் சொன்னார்.
அதன்பிறகு சினிமாவில் நுழைந்தேன். எனக்கான அடையாளத்தை பெற்றேன். பொத்தாம் பொதுவாக வாரிசு நடிகை என்று என்னை விமர்சிப்பவர்களை பற்றி நான் தவறாகவே நினைக்கவில்லை. விமர்சனங்கள் என்னை ஒருபோதும் பாதிக்காது. விமர்சனங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவள் நான். ஏனெனில் என் அடையாளத்தை தாண்டி என் திறமையை அதிகம் நம்புகிறேன்.
எனக்கு ஒரு வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. விரைவில் அது நடக்க வேண்டும் என்று காத்திருக்கிறேன். ஒரு நடிகையாக எனக்கும் அப்பா டைரக்சனில் நடிக்க ஆசை. சிவகார்த்திகேயனுடன் மீண்டும் ஜோடியாக நடிக்க ஆசை. அதேபோல் ராம்சரண் அர்ஜுன் போன்றவர்களுடன் தெலுங்கில் ஜோடி சேரவும் ஆசைப்படுகிறேன் என்று அதிதி ஷங்கர் கூறியிருக்கிறார். அப்போ வேள்பாரி படத்துல நிச்சயம் வாய்ப்பு கிடைக்குமா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்திருக்கின்றனர்.





