- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் என்னை வேண்டாம் என்றார், இயக்குனர் ராஜமவுலி என்னை பாராட்டினார் -...

அந்த படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் என்னை வேண்டாம் என்றார், இயக்குனர் ராஜமவுலி என்னை பாராட்டினார் – நடிகர் சந்தானம் சொன்ன ருசிகர தகவல்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான சந்தானம் இப்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து விட்டார். அவர் நடித்த பல படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக இருந்து ரசிகர்களும் அந்த படங்களை கொண்டாடி இருக்கின்றனர். அந்த வரிசையில் தில்லுக்கு துட்டு தில்லுக்கு துட்டு 2 படங்களை தொடர்ந்து இப்போது டிடி நெக்ஸ்ட் லெவல் படம் நாளை வெளியாக உள்ளது.

சில படங்களில் காமெடி நடிப்பில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து விட்டாலே பிறகு ஹீரோவாகி விடும் எண்ணம் காமெடி நடிகர்களுக்கு வந்து விடுகிறது. நடிகர் கவுண்டமணியில் துவங்கி நடிகர்கள் விவேக் வடிவேலு சந்தானம் யோகிபாபு சூரி வரை அது தொடர்கதையாகி வருகிறது. இதனால் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு பஞ்சம் நீடிக்கிறது.

- Advertisement -

நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் சபாபதி பாரிஸில் ஜெயராஜ் வடக்குப்பட்டி ராமசாமி தில்லுக்கு துட்டு தில்லுக்கு துட்டு 2 ஏ ஒன் கண்ணா லட்டு தின்ன ஆசையா டிக்கிலோனா என பல படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. இப்போது டிடி நெக்ஸ்ட் லெவல் படமும் பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சந்தானம் ஆரம்பத்தில் விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற காமெடி ஷோவில் நடிகர்களை கலாய்க்கும் கேரக்டர்களில் நடித்துக்கொண்டு இருந்தார். அவரை சினிமாவுக்குள் அழைத்து வந்தவர் நடிகர் சிலம்பரசன். தனது மன்மதன் வல்லவன் ஒஸ்தி போன்ற கேரக்டர்களில் நடிக்க வைத்து சந்தானத்தை பெரிய அடையாளத்தை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தார். அதனால்தான் எஸ்டிஆர் 49 படத்தில் மீண்டும் காமெடி ரோல் செய்கிறார் நடிகர் சந்தானம்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் சந்தானம் கூறியதாவது, தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் என்னை முதலில் வேண்டாம் என்று வெற்றிமாறன் கூறிவிட்டார். பிறகு தயாரிப்பாளர் கொடுத்த நெருக்கடியில் தான் என்னை அந்த படத்தில் சேர்த்தார். எனக்கு அந்த படத்தில் கேரக்டரே கிடையாது.

நான் கருணாஸின் நண்பராக அவருடன் ஒன் லைன் பஞ்ச் டயலாக்குகளை பேசினேன். அது படம் வெளியான பிறகு பெரிய அளவில் ஹிட்டானது. அதேபோல் இயக்குனர் ராஜமவுலி இயக்கிய நான் ஈ படத்தில் எனக்கு வசனமே இல்லாமல் ஒரு கேரக்டரை கொடுத்தார். ஆனால் நான் டப்பிங்கில் சில வசனங்களை பேசினேன். அதை பார்த்து வியந்த இயக்குனர் ராஜமவுலி என்னை பாராட்டினார் என்று நடிகர் சந்தானம் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்