- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது பழைய மேனேஜருக்கு கல்தா கொடுத்த நடிகர் சந்தானம்; படத்தின் டைட்டிலையே மாற்றிய காரணம் இதுதானா?...

தனது பழைய மேனேஜருக்கு கல்தா கொடுத்த நடிகர் சந்தானம்; படத்தின் டைட்டிலையே மாற்றிய காரணம் இதுதானா? வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர்சந்தானம். ரஜினி விஜய் சிம்பு அஜீத்குமார் தனுஷ் சூர்யா விக்ரம் படங்களில் காமெடி ரோல்களில் நடித்த சந்தானம் ஒரு கட்டத்துக்கு பிறகு கதாநாயகனாக மாறினார். அவர் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் தில்லுக்கு துட்டு கண்ணா லட்டு தின்ன ஆசையா ஏ ஒன் உள்ளிட்ட பல படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.

பல ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் தில்லுக்கு துட்டு. சந்தானம் கருணாஸ் மொட்டை ராஜேந்திரன் ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் திகில் பின்னணியை கொண்டது. இந்த படம் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து தில்லுக்கு துட்டு படம் டிடி ரிடர்ன்ஸ் 2 என்ற 2ம் பாகமாக உருவானது. அந்த படத்திலும் சந்தானம் நடித்தார். அந்த படமும் பெரிய வெற்றி பெற்றது.

இப்போது அந்த படங்களின் தொடர்ச்சியாக டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற படத்தில் நடிகர் சந்தானம் நடிக்க உள்ளார். இந்த புதிய படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது. ஆனால் தில்லுக்கு துட்டு 3ம் பாகம் என்று இல்லாமல் டிடி நெக்ஸ்ட் லெவல் என பெயரிடப்பட்டு, அந்த டிடி என்பதன் விரிவாக்கம் டெவில்ஸ் டபுள்ஸ் என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இப்படி ஒரே படத்தின் தொடர்ச்சியாக வெளியான 3வது பாகத்துக்கு தில்லுக்கு துட்டு என்பதற்கு பதிலாக டெவில்ஸ் டபுள்ஸ் என டைட்டிலில் பெயர் மாற்றம் ஏன் என்பதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. சில முன்னணி நடிகர்கள் தங்களது படங்களை தங்களது மேனேஜர் பெயரில் பினாமியாக தயாரிப்பது வழக்கம். அப்படிதான் அப்போது சந்தானத்தின் மேனேஜராக இருந்த ரமேஷ் என்பவர், தில்லுக்கு துட்டு படத்தை தயாரித்தார்.

அடுத்து சந்தானம் நடித்த டிடி ரிடர்ன்ஸ் 2ம் பாகத்தை நடிகர் ஆர்யா தயாரித்தார். இதற்கிடையே தனது மேனேஜர் ரமேஷை அந்த பொறுப்பில் இருந்து நீக்கி, நடிகர் சந்தானம் அவரை வெளியே அனுப்பி விட்டார். மேலும் சந்தானத்தின் பினாமியாக ரமேஷ் தயாரித்த படங்களுக்கான கடன், நஷ்டம் போன்ற பிரச்னைகளுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்றும் நடிகர் சந்தானம் ஒதுங்கிக் கொண்டார்.

இந்த சூழ்நிலையில் இப்போது தில்லுக்கு துட்டு படத்தின் 3ம் பாகமாக உருவாகும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்துக்கு தனது பழைய மேனேஜர் ரமேஷ் மூலம் சட்ட சிக்கல் வில்லங்கம் எதுவும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, முன் எச்சரிக்கையாக டிடி என்பதற்காக விளக்கத்தை டெவில்ஸ் டபுள்ஸ் என டைட்டிலில் சந்தானம் மாற்றம் செய்திருப்பதாக மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.

சற்று முன்